தமிழகத்தில் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், திமுக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்ற 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள கடந்த மே 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினமே ஆளுநரை சந்தித்த ஸ்டாலின், ஆட்சி அமைப்பதற்காக கோரிக்கையை வைத்தார். இதனையடுத்து நாளை காலை (மே 07) 9 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், தற்போது தனது அமைச்சரைவையில் இடம்பெறும் அமைச்சர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடனே ஸ்டாலின் அமைச்சரவை பட்டியலை தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த பட்டியலில் இருந்த சிலர் தேர்தல் தோல்வியடைந்த நிலையில், அவர்களது இடத்தில் யாரை தேர்வு செய்வார் என்று திமக எம்எல்ஏக்களிடையெ பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
மேலும் வேட்பாளர்கள் பட்டியல் போன்று அமைச்சரவை பட்டியலையும் ஸ்டாலின் மூத்த அரசியல் தலைவர்களுக்கு கூட தெரியாமல ரசியம் காத்து வந்த நிலையில், நாளை முதல்வராக பதவியேற்கும் சூழலில் இன்று அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை பட்டியல் அறிவிப்பு; உதயநிதிக்கு இடமில்லை
இதன்படி,
துரைமுருகன் – நீர்பாசனத்துறை, கே.என. நேரு – நகராட்சி வளர்ச்சித்துறை, ஐ.பெரியசாமி –கூட்டுறவுத்துறை , பொன்முடி – உயர்கல்வித்துறை, எ.வ.வேலு – நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் –வேளான்துறை, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை, தங்கம் தென்னரசு, தொழில்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, ரகுபதி- சட்டத்துறை, முத்துசாமி, வீட்டுவசதித்துறை, பெரிய கருப்பன் ஊரக வளர்ச்சித்துறை
தா.மோ. அன்பழகன் – ஊரக தொழில்துறை, மு.பெ.சாமிநாதன் – ஊடகத்துறை, கீதா ஜீவன் –சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமறிப்பு, ராஜ கண்ணப்பன் – போக்குவரத்துதுறை, சக்கரபாணி – உணவுத்துறை, கா.ராமச்சந்திரன் - வனத்துறை, செந்தில் பாலாஜி – மின்சாரத்துறை,
ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை, மா.சுப்பிரமணியன் – சுகாதாரத் துறை, பி.மூர்த்தி – வணிகவரித் துறை, எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சேகர்பாபு – இந்து அறநிலையத் துறை, பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை, சா.மு.நாசர் – பால்வளத் துறை மஸ்தான் – சிறுபான்மையினர் நலத் துறை, அன்பில் மகேஷ் – பள்ளிக்கல்வித் துறை, மெய்யநாதன் – சுற்றுச்சூழல் துறை சி.வி.கணேசன் – தொழிலாளர் நலத் துறை, மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை, மதிவேந்தன் – சுற்றுலாத் துறை, கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத் துறை
என அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil