scorecardresearch

கோவையில் சாப்பாட்டு பில் சர்ச்சை: தேஜஸ்வி சூர்யா வீடியோவும் அன்னபூர்ணா விளக்கமும்!

கோவை வந்த பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்

கோவையில் சாப்பாட்டு பில் சர்ச்சை: தேஜஸ்வி சூர்யா வீடியோவும் அன்னபூர்ணா விளக்கமும்!

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள கோவை வந்த பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்காக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழகத்திற்கு வந்த எம்பியும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான  தேஜஸ்வி சூர்யா வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் உரையாடிய அவர், தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். அதில் இன்று காலை அவர் கோவை அன்னபூர்ணா உணவகத்தில் சாப்பிடுவதற்கான சென்றுள்ளார். அப்போது, சாப்பிட்டு முடித்துவிட்டு, அவர் தான் சாப்பிட்டதற்கான பில்லை செலுத்த சென்றுள்ளார். அப்போது பில் கவுண்டரில் இருந்த உணவக ஊழியர் ஒருவர், அவரிடம் பணம் வாங்க மறுத்துள்ளார். அதற்கு நான் திமுக இல்லை பிஜேபி அதனால் என்னிடம் நீங்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.  

தற்போது தேஜஸ்வி சூர்யா பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ள அன்னபூர்ணா உணவகம் தனது பேஸ்புக் பக்கத்தில், அன்புள்ள தேஜஸ்வி சூர்யா எங்கள் உணவகத்தில் உங்களுக்கு சேவை செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அன்னபூர்ணாவில் நாங்கள் அனைவரையும் ஒரே அன்புடனும் நன்றியுடனும் வாழ்த்துகிறோம், உண்மையில் எல்லோரும் தங்கள் கட்டணங்களை செலுத்த முன்வருகிறார்கள். யாரும் எங்களை எதையும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, சில சமயங்களில் நம் சமூகத்திற்காக உழைக்கும் மக்களிடமிருந்து பணம் வாங்குவதை தவிர்த்து வருகிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu assembly election campaign tejasvi surya covai south

Best of Express