Advertisment

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு

Election Campaign A.Rasa : முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக தலைவர்களின் ஒருவரான ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு

Tamilnadu Assembly ELection Campaign Case Filed Against A.Rasa : தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர்களின் ஒருவராக ஆ.ராசா மீது முதல்வர் குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில் திமுகவில் முன்னணி தலைவர்களில் ஒருவராக ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழில் என்பவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தில் முதல்வர் குறித்து அவதூறு பரப்ப்பும் வகையில் பேசிய அவர், முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சை கருத்து குறியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவில் உள்ள முக்கிய தலைவர்களே ராசாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் மறைமுகமாக கண்டனக்குரல் கொடுத்தனர்.

அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ; முதல்வர் பிறப்பை கொச்சைப் படுத்தவில்லை’: ஆ.ராசா விளக்கம்

இதில் ஒரு படி மேலே சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், திமுக கழகத்தினர் பிரச்சாரத்தின் போது கன்னியமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், தரக்குறைவாக பேச்சுக்களை ஒதுபோதும் கழகம் ஏற்பதில்லை என்றும்,  இதனால் கழக உறுப்பினர்கள் கழகத்தின் உறுப்பினர்கள் மரபையும் மாண்பையும் மாறாத மனதில் வைத்து வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் திமுகவின் வெற்றிக்கு தடை விதிக்கும் முயற்சியில் சிலர் கழகத்தினரின் பேச்சை தவறாக சித்தரித்து வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.  தோல்வி பயத்தால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள் அவர்களின் எண்ணம் நிறைவேறாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்த ஆ.ராசா, இந்த வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ, பழனிச்சாமியின் பிறப்பு குறித்து எவ்வித அவதூறு கருத்தையும்தான் கூறவில்லை என்று தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் நேர் வழியில் அரசியலுக்கு வந்தவர் என்றும், பழனிச்சாமி குறுக்கு வழியில் முதல்வர் பதவி பெற்றவர் என்றுதான் நான் கூறினேன் நீங்கள் தவறாக புரிந்துகொண்டால்  அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராசா விளக்கம் அளித்திருந்தாலும், முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், தேர்தல் விதி மீறல், அவதூறாக பேசுதல், கலவரத்ரா தூண்டுதல் என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment