scorecardresearch

பாஜக விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகள்: எதிர்ப்பு தெரிவித்து பதிவு

Assembly Election Tamilnadu : பாஜக தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

பாஜக விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகள்: எதிர்ப்பு தெரிவித்து பதிவு

Tamilnadu Election Update : பாஜக தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகள் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது இணைத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வெற்றியை நோக்கி தீவிரமாக காய் நகர்த்தி வரும் நிலையில், பிட்நோட்டீஸ்கள், சுவர் விளம்பரங்கள், மற்றும் இணையதளத்தில் தங்களது கட்சிகளின் தேர்தல் அறிக்கை, தங்கள் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் என அனைத்தையும் விளம்பரப்படுத்தி வருகிறது.

இதில் இளைஞர்கள் பவரும் ஸ்மார்ட்போன், மடிக்கணிணி ஆகியவற்றை பயன்படுத்துவதால், டிஜிட்டல் முறையில் விளம்பரம் செய்வதற்கே அனைத்து கட்சிகளுக்கும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பாஜக சார்பில் பலவகையான விளமபரங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பாஜக சார்பில் ட்விட்டரில் பகிரப்பட்ட விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்பலைகள் வீசிவரும் நிலையில், எப்படியேனும் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக அதில் கனிசமான தொகுதிகளில் வெற்றிகள் பெறவேண்டும் என்று உறுதியுடன் தேர்தல் பணிகளில் தீவிரமான ஈடுபட்டு வருகிறது. இதில் சமீபத்தில் பாஜக சார்பில் ட்விட்டர் பக்கத்தில், ‘’தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் வாக்களிப்பீர் தாமரைக்கே’’ என்று பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் யாருடையது என்று ஆராயந்து பார்த்தால், அது காங்கிரஸ் கட்சியில் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரத்தின் புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த “செம்மொழியான தமிழ்மொழியே” பாடலுக்காக  எடுக்கப்பட்ட வீடியோவில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பரதநாட்டிய ஆடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சிகளில் இருந்து இந்த எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், பாஜக விளம்பரத்தில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது குறித்து பதிலளித்துள்ள ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் “ பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்காக எனது புகைப்படத்தை பயன்படுத்தியது அபத்தம். தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என தெரிவித்திருக்கிறார் பாஜகவின் தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் பிரமுகரின் மனைவி புகைப்படம் இடம்பெற்றுள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu assembly election karthik chidambaram wife photo in bjp election advertisement