தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்கவுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் முடிவுகள் வெளியாக தாமதமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும ஒரே கட்டமாக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 70% மேல் வாக்குகள் பதிவாகியிருந்த இருந்த நிலையில், இந்த வாக்குகள் நாளை (மே 2) எண்ணப்படுகிறது. இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் முடிவுகள் அறிவிக்க தாமதமாகும்ம் என்று சென்னை மாநகரட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் சாலயில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை மையத்தை திறந்து வைத்த அவர், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் 90% முன்கள பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், 619 முன்கள பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாக்கு எண்ணும் பணிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 150 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பதிவேட்டின்படி கொரோனா தொற்று முதல் அலையில், 26 முன்கள பணியாளர்கள் இறந்துள்ள நிலையில், இரண்டாவது அலையில், காவல் துறையில் 3 நபர்கள் இறந்துள்ளனர் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாவட்டத்தில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், மொத்தம் 5,795 வாக்குச்சாவடி முகவர்கள், 400 ஊடக பணியாளர்கள், 2,000 காவலர்கள், 1,050 முன்களப் பணியாளர்கள் காவலர்கள் 2000 பேர் , 1,050 முன்கள பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட உள்ளனர்.
சுமார் 6000 வாக்குச் சாவடி மையங்கள் உள்ள சென்னையில், குறைந்தபட்சம் தி.நகரில் 14 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், முடிவுகள் வெளிவர 20 மணி நேரம் வரை ஆகலாம். ஆனால் இந்த நேரத்தை குறைக்க முயற்சி செய்வோம் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாக தாமதமாகும் என்று கூறியுள்ளதால் திமுக தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil