/tamil-ie/media/media_files/uploads/2021/04/minister.jpg)
விவிபேட் சிலிப் வராததால் வாக்குச்சாவடியில் அமைச்சர் செல்லூர் ராஜூ தர்ணாவில் ஈடுபட்டதால் பரப்ப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் ஒரு சல இடங்களில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது. மேலும் சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை மற்றும் பாஜகவுக்கு வாக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மதுரை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் செல்லூர் ராஜூ அதே தொகுதியில் உள்ள மீனாட்சி அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்ய சென்றுள்ளார். தொடர்ந்து தனது வாக்கை பாதிவு செய்த அவர், விவிபேட் இயத்திரத்தில் தனக்காக ஒப்புகை சீட்சை சரிபார்ப்பதற்காக நின்றுள்ளார். ஆனால் விவிபேட் இயந்திரத்தில் அவருக்கான ஒப்புகை சீட்டு வரவில்லை. இதனால் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்ட அவர், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் தனது வாக்கு பதிவாகியுள்ளது என்பதை உறுதி செய்த பிறகே தான் வெளியே செல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக அந்த வாக்குச்சாவடிக்கு வந்த மண்டல அதிகாரி வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதனை செய்து அவரின் வாக்கு பதிவாகியுள்ளதை உறுதி செய்தபிறகே அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கிருந்து புறப்பட்டார். அமைச்சரின் இந்த தர்ணாவால் வாக்குப்பதிவு சற்றுநேரம் தாமதமானது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.