scorecardresearch

தபால் வாக்கு விவரங்களை வெளியிட்ட விவகாரம் : ஆசிரியை உட்பட 3 பேர் கைது

Assembly Election Postal Vote : தபால் ஓட்டு குறித்து சமூகவலைதளங்களி்ல் பதிவிட்ட ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தபால் வாக்கு விவரங்களை வெளியிட்ட விவகாரம் : ஆசிரியை உட்பட 3 பேர் கைது

Tamilnadu Assembly Election 2021 : தபால் வாக்கு அளித்தது குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவிட்ட பள்ளி ஆசிரியயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மற்றும் காவல்துறையினர் தீவிர தேர்தல் பணியிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தோதல் நாளன்று இவர்கள் தங்களது தொகுதிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை இருப்பதால் தேர்தலுக்கு முன்பே தபால் வழியாக தங்களது வாக்கை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் தங்களது வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு பெறப்படும் வாக்குள் அவர்களின் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சேகரித்து வைக்கப்படும். தொடர்ந்து நேரடி வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று இந்த வாக்குள் சேர்த்து சேர்த்து எண்ணப்படும்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் சரகம், கரண்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பாணியாற்றி வரும் ஒருவர், தனது தபால் வாக்கை பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் வாக்களித்த விவரங்கள் குறித்து தனது வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆசிரியையின் இந்த பதிவை பார்த்த அந்த தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்குப் புகாராக அளித்துள்ளார். மேலும் ஆசிரியையின் பதிவுகளை நகலெடுத்து அதையும் சேர்த்து புகார் அனுப்பியுள்ளார். இதனையத்து தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று முதல் அவர் ஆசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக மாவட்டக் கல்வி அதிகாரி அறிவித்தார்.

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வாக்குச்சீட்டை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட செந்தில் பாண்டியன் என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வாக்குச்சீட்டு கணேசபாண்டியன் என்பவரின் மனைவி ஆசிரியை கிருஷ்ணவேணி என்பவரின் வாக்குச்சீட்டு என்பது தெரியவந்தது. இதில் கிருஷ்ணவேணி தனது மகனிடம் காட்டுவதற்காக வாக்குச்சீட்டை போட்டோ எடுத்ததாகவும், அதனை தனது கணவர் வாஸ்ட்அப் குழுவில் பகிர்ந்த்தாகவும், அதனை வேறு யாரோ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 178-ன் படி கிருஷ்ணவேணி, கணேசபாண்டியன், செந்தில் பாண்டியன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu assembly election postal vote details in social media