வாக்குச்சாவடி முகவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

Tamilnadu assembly election: சென்னையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை.

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் சென்னையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.பரிசோதனை முடிவில் பாசிட்டிவ் வந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி கூறுகையில்,

சென்னையில் உள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் நோக்கம் தொற்று பாதிக்கப்பட்டவர்களை மையத்திற்கு செல்லாமல் தடுப்பதே ஆகும். முகவர்கள் நேர்மறையாக சோதிக்கப்பட்டால் கூடுதல் முகவர்களை இருப்பு வைத்திருக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் இந்த மையங்களில் காற்றோட்டத்திற்காக எக்ஸ்ஹாஸ்டர் ஃபேன் அதிகளவில் பொருத்தப்பட்டுள்ளது. மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்குவதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு தடைப்படும் என்றும் இது கட்சிகளிடையே சந்தேகளுக்கு வழிவகுக்கும்.

இந்த நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளை நியமிக்க TANGEDCO சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கையும், வாக்குச் சாவடிகளும் அதிகரித்துள்ளதால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை அதிக நேரம் எடுக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. திநகர் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால் , இந்த தொகுதியில் முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு எண்ணும் மையங்களிலும் 14 மேசைகள் இருக்கும், ஆனால் வாக்குகளை எண்ணும் பணி குறைந்தது 12 மணி நேரம் நடைபெறும். இதனால் வாக்கு எண்ணும் பணி இரவு தான முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாவட்ட தேர்தல் அலுவலகம் வாக்கு எண்ணும் முகவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து அனைத்து அம்சங்களையும் விவாதிக்க புதன்கிழமை ஒரு கூட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election vote counting covid test for all polling agents

Next Story
அதிகரித்து வரும் கொரோனா தொற்று; ரெம்டிசிவிர் மருந்து வாங்க குவியும் மக்கள்!Tamilnadu news in tamil: Overcrowding at Kilpauk hospital to buy Remdesivir, complaints of poor arrangements
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X