சட்டசபையில் குட்கா… திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான 2-வது நோட்டீஸ் ரத்து

Tamilnadu Assembly News : சட்டசபைக்கு குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான 2-வது நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

High Court News For Assemble Gutka Case : தமிழகத்தில் குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை  பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் கடைகளில் எளிதாக கிடைக்கிறது என்று திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபையில், திமுக எம்எல்ஏக்கள், இந்த போதை பொருட்களை எடுத்து வந்து காண்பித்தனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர், சட்டசபையில் குட்கா எடுத்து வந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விதி மீறில் குழு, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 பேருக்கு சட்டசபை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்எல்ஏக்கள் தமிழக அரசு தனது பெரும்பான்மையை நிருபிக்க எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி  திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசில்,  தவறுகள் உள்ளதால், இந்த நோட்டீஸ் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி நோட்டீசை ரத்து செய்தது.  ஆனாலும் அதில் உள்ள தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து உரிமை மீறல் குழு தவறுகளை திருத்திக்கொண்டு 2-வது முறையாக திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கியது.  ஆனால் இந்த முறையும் நோட்டீசை ரத்து  செய்யக்கோரி திமுகவை சேர்த்த 18 எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு மீதாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்து. ஆனால் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக உரிமை மீறல் குழு மற்றும் சட்டசபை செயலாளர் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், சட்டசபை செயலாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டசபை மரபுகளை மீறி திமுகவினர் போதை பொருட்களை உள்ளே எடுத்து சென்றுள்ளர். தமிழக அரசு தனது பெரும்பான்மை நிரூபிக்க இத்தகைய நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறியிருப்பது ஏற்புடையதல்ல என வாதிட்டார். மேலும் பேச்சுரிமை என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டசபைக்கு எடுத்து வந்து அதனை ஊக்குவிக்க திமுக முயற்சி செய்கிறது என்றும், தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின், கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில், உரிமை மீரல் குழு பரிந்துரை மீது சட்டப்பேரவை இறுதி முடிவெடுத்து, அதனை எதிர்த்து வழக்கு தொடரும்பட்சத்தில் தான் நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக பேரவை உரிமைக்குழு அனுப்பிய 2ஆவது நோட்டீசை ரத்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly gutka case cancel 2nd notice aganist dmk

Next Story
நெய்வேலி என்.எல்.சி-யில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு; தலைவர்கள் கண்டனம்Neyveli nlc, neyveli nlc india, neyveli nlc recruitment issu, நெய்வேலி என்எல்சி, நெய்வேலி, தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு, tamil people discremination in nlc, Thirumavalavan condmen, வைகோ கண்டனம், திருமாவளவன் கண்டனம், விசிக, சீமான் கண்டனம், நாம் தமிழர் கட்சி, vck, mdmk, vaiko condemn, seeman condemn, naam tamilar katchi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com