Advertisment

ஜெய் ஹிந்த் பேச்சு சரியா? ஈஸ்வரனுக்கு காங்கிரசும் எதிர்ப்பு

Kongu Eswaran speech In Assembly : திருச்சங்கோடு எம்எல்ஏ கொங்கு ஈஸ்வரன் ஜெய்ஹிந்த் வார்த்தை குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஜெய் ஹிந்த் பேச்சு சரியா? ஈஸ்வரனுக்கு காங்கிரசும் எதிர்ப்பு

Kongu Eswaran Jaihind Issue : தமிழக சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த கொங்கு ஈஸ்வரன்,ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறாதது, தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டதற்கான அடையாளம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. 24-ந் தேதி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில், முதல்நாளில் ஆளுநர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் விவாதங்கள் நடைபெற்றதை தொடர்ந்து கடைசி நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான இ.ஆர். ஈஸ்வரன், தனது உரையில், ஆளுநர் உரையிலேயே அனைத்தையும் சொல்லிவிட முடியாது. இது வெறும் முன்னோட்டம்தான். தமிழக முதலமைச்சருடைய 50 ஆண்டு கால அனுபவத்தை அந்த ஆளுநர் உரையிலே நான் பார்க்கின்றேன். எந்தவிதமான புகழ்ச்சியும் இல்லாமல் ஆக்கபூர்வமான கருத்துக்களைத்தான் அரசு செய்யப்போகிறது என்பதை சொல்லியிருக்கின்றார்.

எல்லோருக்கும் எல்லாமும்.. என்ற வார்த்தை என்பது ஒரு சின்ன வார்த்தை அல்ல. இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளை போட்டிருக்கிறார்கள். "என்னுடைய அரசு என்னுடைய அரசு" என்று இந்த மன்றத்தில் உரையாற்றியதையெல்லாம் பார்த்து இருக்கின்றோம். ஆனால், இந்த அரசு மக்களுக்கான அரசு என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.  ஆக்கபூர்வமான கருத்துக்களைத்தான் இந்த அரசு விரும்புகிறது, எதிர்பார்க்கிறது. அது ஆளுநர் உரையில் கொல்லப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையை படித்தவுடனேயே தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், சென்ற ஆட்சியில் ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே, நன்றி, வணக்கம், ஜெய் ஹிந்த் என்று போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்த ஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று முதலமைச்சர் டெல்லியில் சொன்னதை இந்த அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்ற அந்த நம்பிக்கை இன்று வந்திருக்கிறது என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது ஆளுநர் உரையில் இருந்த ஜெய்ஹிந்த் வார்த்த தற்போதைய ஆளுநர் உரையில் இல்லை என்று கூறியது குறித்து பலரும் கண்டளம் தெரிவித்து வருகின்றனர்.  இது  குறித்து நெட்டிசன்கள் பலரும், தமிழரால் சொல்லப்பட்ட ஜெயஹீந்த் வார்த்தை, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியால் இந்திய அளவில் புகழ்பெறச் புகழ் பெற்றது. தற்போது இந்த வார்த்தை ராணுவத்தில் அதிகாரிகள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, தேசப்பற்றை நினைவுபடுத்துகிறது தேசப்பைற்றை நினைவுபடுத்தும் இந்த வார்த்தை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஈஸ்வரனுக்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன.

இது குறித்து பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ஈஸ்வரனின் உரையில் கடைசி சில நிமிடங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தீர்ப்பை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில், இதைப்போல ஒரு தேசவிரோத கருத்து இருக்க முடியாது ஈஸ்வரன் போன்றவர்கள் ஈஸ்வரனின் கோவத்திற்கு ஆளாக வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மட்டுமல்லாது காங்கிரஸ் தரப்பிலும் கொங்கு ஈஸ்வரனுக்கு எதிர்ப்புகள் குவிந்து வரும் நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜெய்ஹிந்த் என்பது தவறான வார்த்தை அல்ல. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் , சட்டசபையில் திரு ஈஸ்வரன் MLA அவர்களிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும் ! என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment