பொய் வாக்குறுதி கொடுத்து திமுக வெற்றியா? சட்டமன்றத்தில் முதல்வருடன் ஸ்டாலின் விவாதம்

Tamil Nadu Assembly Meeting Today News: முதல்வர் பழனிசாமி, ‘இதைத்தான் நெடுஞ்காலமாக கூறிவருகிறீர்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், எங்களாலும் நிச்சயம் வெல்லமுடியும்’ என்றார்.

By: Jul 1, 2019, 5:47:52 PM

Tamil Nadu Assembly Meeting today updates: திமுக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விட்டதாக முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். எதைவைத்து அப்படி கூறினீர்கள் என்று ஸ்டாலின் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் என்றார். முதல்வர் பழனிசாமி, ‘இதைத்தான் நெடுஞ்காலமாக கூறிவருகிறீர்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், எங்களாலும் நிச்சயம் வெல்லமுடியும்’ என்றார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது. மறைந்த முன்னாள் உறுப்பினர் குமாரதாஸுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பரபரப்பு விவாதங்களும் இடம் பெறுகின்றன. தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான லைவ் செய்திகளை இங்கு காணலாம்.

தமிழ்நாடு  சட்டசபை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேரின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

Tamil Nadu Assembly Session News: தமிழ்நாடு சட்டமன்றம் செய்திகள்

பின்னர் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டம் சனி. ஞாயிறு விடுமுறைக்குப் பின் மீண்டும் இன்று(ஜூலை 1ம் தேதி) கூடியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இன்று முதல், சட்டசபை கூட்டத்தொடர் முடிவடையும் வரை, ஒவ்வொரு நாளும், சட்டசபையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே, காரசாரமான விவாதங்களும், மோதல்களும் அரங்கேறுவது உறுதி.

Live Blog
Tamil Nadu Assembly Session Today News: இன்று முதல், சட்டசபை கூட்டத்தொடர் முடிவடையும் வரை, ஒவ்வொரு நாளும், சட்டசபையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே, காரசாரமான விவாதங்களும், மோதல்களும் அரங்கேறுவது உறுதி.
16:18 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Session : தமிழகத்தில் 6 நதிகள் மாசடைந்துள்ளன : அமைச்சர் கருப்பணன்

தமிழகத்தில் 6 ஆறுகள் மாசடைந்துள்ளது, நீர் தர மேலாண்மை பிரிவை ஏற்படுத்தி மாசுகள் அகற்றப்படும் என சட்டசபையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

15:33 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly News In Tamil : அதிமுக ஆட்சியில் தான் அதிக நீர் விநியோகம் : முதல்வர் பழனிசாமி

தி.மு.க ஆட்சி காலத்தைவிட அ.தி.மு.க ஆட்சியில் தான் 7 ஆயிரத்து 508 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவும் போது கூட, மக்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வர்  பழனிசாமி கூறியுள்ளார்.

15:02 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Today News Live : தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் : ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், பருவமழை கைவிட்டதால், அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காட்சி அளிப்பதாக கூறினார். தண்ணீர் பற்றாக்குறையால் தமிழக மக்கள் தத்தளித்து வருவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது வரவேற்கத்தக்க செயல் என பாராட்டினார்.

14:17 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Latest News : சட்டசபையில் முதல்வர் - ஸ்டாலின் காரசார வாக்குவாதம்

திமுக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விட்டதாக முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். எதைவைத்து அப்படி கூறினீர்கள் என்று ஸ்டாலின் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் என்றார்.

முதல்வர் பழனிசாமி : இதைத்தான் நெடுஞ்காலமாக கூறிவருகிறீர்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், எங்களாலும் நிச்சயம் வெல்லமுடியும் என்றார்.

13:29 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Today News Live : பொய்யான வாக்குறுதிகளால் திமுகவிற்கு வாக்குகள் : முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

மக்களவை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது திமுக தான் என்று திமுக எம்எல்ஏ உதயசூரியன் சட்டசபையில் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் பழனிசாமி கூறியதாவது, குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளது திமுக என்று குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளது திமுக என்று கூறினார். இவ்வாறு சட்டசபையில் திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

12:51 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Session : தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை – அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை ; தண்ணீர் பற்றாக்குறை தான் நிலவுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டசபையில் தெரிவித்துள்ளார்.  திமுக கொண்டு வந்துள்ள கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் வேலுமணி கூறியதாவது, தமிழகம் முழுவதும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 68 விழுக்காடு மழை குறைவு, இயற்கை பொய்த்தபோதும், அரசு தண்ணீர் வழங்கி வருகிறது. தண்ணீர் பிரச்சினையில், முதலமைச்சர் பழனிசாமி தனி கவனம் செலுத்தி வருகிறார். ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ₨65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

12:28 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly News In Tamil : காவிரி நீர் விவகாரம் – காங்கிரசுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி

நீதிமன்றம் மூலமாக தீர்ப்பை பெற்று, அதன்படி தான்  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது, ஆனால், தேர்தல் பிரசாரத்தில், ராகுல்காந்தி பேசியது குறித்து, ஒரு குரல் கொடுத்தீர்களா?  என்று காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் உங்களது கூட்டணி கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது, காவிரி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுங்கள் என சட்டசபை  காங்கிரஸ் கட்சி  தலைவர் ராமசாமிக்கு, முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

12:14 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly News Live : திமுக வெளிநடப்பு - ஸ்டாலின் பேட்டி

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழக மக்களை பற்றி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கூறிய கருத்துகள் தவறு. இந்த கருத்தை அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கியதால் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் கூறினார்.

11:59 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Session : தீர்மானம் குறித்த திமுகவின் கடிதம் – சபாநாயகர் ஏற்பு

சட்டசபை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்த போவதில்லை என்ற திமுகவின் கடிதத்தை, சபாநாயகர் தனபால் ஏற்றுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதம், வலியுறுத்தப்படவில்லை என தெரிவித்துக்கொள்வதாக தனபால் அறிவித்துள்ளார்.

11:41 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Meeting Today News Live: சேலத்தில் தெற்கு ஆசியாவின் பெரிய கால்நடைப் பூங்கா- முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

சட்டப் பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்டுவார்’ என்றார்.

11:28 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Latest News: பட்டாவுடன் நிலம் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களுக்கும் வீடுகள்- அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சர் ஜெயகுமார் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், ‘மீனவர்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதில் ரூ 53 கோடி வரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்து, பட்டாவுடன் நிலம் வைத்திருக்கும் அனைத்து மீனவர்களுக்கும் புதிய வீடுகள் கட்டித்தர அரசு தயாராக உள்ளது’ என்று கூறினார்.

10:55 (IST)01 Jul 2019
TN Assembly Session: குடிநீர் பிரச்னையை கிளப்ப திமுக திட்டம்

சென்னை குடிநீர் பிரச்னையை சட்டமன்றத்தில் பிரதானமாக எழுப்ப திமுக திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது.

10:27 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly News Live: நாகையில் புதைவட மின்கம்பி பொருத்தப்படும் : அமைச்சர் தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயர்மின்கோபுர மின்கம்பிகளுக்கு பதிலாக, புதைவட மின்கம்பி பொருத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

10:17 (IST)01 Jul 2019
இந்தியாவின் இளம்தலைவர் ஸ்டாலின் : திமுக எம்எல்ஏ ரங்கநாதன்

இந்தியாவின் இளம்தலைவராக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளதாக வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ரங்கநாதன் கூறியுள்ளார். புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளில் 52 சதவீத வாக்குகளுடன் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக ரங்கநாதன் மேலும் கூறியுள்ளார்.

10:15 (IST)01 Jul 2019
சட்டசபையில் 9 ரத்தினங்கள் : அமைச்சர் செங்கோட்டையன்

சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் செங்கோட்டையன் 9 ரத்தினங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். 9 ரத்தினங்களை வைத்து சட்டசபையில் அழகு பார்க்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

10:05 (IST)01 Jul 2019
Tamilnadu Assembly session meeting begins: சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை  கூட்டத்தொடர் இன்று மீண்டும் துவங்கியது.  முன்னதாக முன்னாள் எம்எம்ஏ குமாரதாஸ் மறைவுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன.  கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

09:57 (IST)01 Jul 2019
சட்டசபை கூட்டத்தொடர் – இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூன்) 28-ந் தேதி தொடங்கிய நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்க இருக்கிறது. முதல் நாளில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

09:43 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly Session Today News Live: சட்டசபை கூட்டத்தொடர் – புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

லோக்சபா தேர்தலில் கைநழுவிய வெற்றியை, இத்தேர்தலில் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில், அ.தி.மு.க., தலைமை உள்ளது.எனவே, வாக்காளர்களை கவரும் வகையில், 110 விதியின் கீழ், முதல்வர், இ.பி.எஸ்., பல்வேறு புதிய அறிவிப்பு களை வெளியிடலாம். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்களும், மக்களை கவரும் வகையில், தங்களின் துறை ரீதியாக புதிய அறிவிப்புகளை வெளியிடலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09:38 (IST)01 Jul 2019
Tamil Nadu Assembly News In Tamil: சட்டசபை கூட்டத்தொடர் – இன்று புயலை கிளப்புமா திமுக!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூலை 1ம் தேதி) மீண்டும் துவங்குகிறது. குடிநீர் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவகாரங்களில் புயலை கிளப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Tamil Nadu Assembly News: சென்னை உட்பட, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, வறண்டு கிடக்கும் நீர்நிலைகளை பராமரிக்காதது உட்பட, அடுக்கடுக்காக பல பிரச்னைகளை எழுப்ப, தி.மு.க., வியூகம் வகுத்துள்ளது. மத்திய அரசின், ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு
விவகாரம், புதிய கல்விக் கொள்கை, ஹிந்தி திணிப்பு, ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கவும், அதற்காக, சிறப்பு தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

Web Title:Tamilnadu assembly live today updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X