ஆகஸ்ட் 13-ல் தமிழக பட்ஜெட் தாக்கல் : சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

Tamilnadu Budget Update : தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Assembly Meet Update : தமிழக சட்டசபையில் வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி 2021-22-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி நிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக துறைவாரியாக அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம நடத்தப்படுவது வழக்கம் .

அந்த வகையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் இள்று நடைபெற்றது.  தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், சட்டசபையில் வரும் 13-ந் தேதி  2021-22-ம் ஆண்டுக்காள நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டதாக சட்டசப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத (பேப்பர்லெஸ்) டிஜிட்டல் முறை நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என்றும், இந்த நிதிநிலை அறிக்கையில், முதல்முறையாக வேளான்றைக்கு தனி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை வாலாஜா சாலையில் ஓமந்தூர் அரசு தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 13-ந் தேதி தமிழக சட்டசபையின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக வரும் ஆகஸ்ட் 9-ந் தேதி கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி நிலை குறித்து 120 பங்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், இந்த அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly meet and budget filed tn government

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com