தமிழக சட்டப்பேரவைக்கான முதல் அமைச்சரவை கூட்டம் வரும் 11-ந் தேதி சென்னை லைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்ற 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான முடிவு கடந்த மே 2-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான மதசர்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்பட்டு நேற்று காலை அவர் முதல்வர் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று தனது முதல்வர் பணிகளை தொடங்கிய ஸ்டாலின், தேர்தல் அறிவிப்பில் வெளியான 5 திட்டங்களை நிறைவேற்றுகோப்புகளில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து வரும் 11-ந் தேதி தமிழகத்தின் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணது அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மே 11-ந் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடைபெறும் என்றும், அடுத்த நாள் (மே 12) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil