தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. காலை, மாலை என இரு அமர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்ற கூட்டத் தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு கூடும். காலை, மாலை இரு அமர்வுகளாக கூட்டம் நடத்தப்படும். மாலையில் 5 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும். முன்பு இதுபோன்று தான் நடத்தப்பட்டது.
கூட்டத் தொடர் கடைசி நாள் 29-ம் தேதி மட்டும் காலை அமர்வு மட்டும் நடைபெறும். மற்ற நாட்களில் காலை, மாலை அமர்வு நடைபெறும். விக்கிரவாண்டி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகல் காலை, மாலை என இரு அமர்வுகளாக பேரவை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூட்டத் தொடர் நடைபெறாது என்று கூறினார்.
கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“