2023 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (ஜனவரி 9 ஆம் தேதி) ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் தேதிக் குறிப்பிடாமல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டது; போலீசாரின் விளக்கத்தால் நீதிபதி அதிருப்தி
இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 2023 ஜனவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனையடுத்து நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து, பின்னர் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். வருகின்ற 11 ஆம் தேதி ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil