தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையின்போது நடந்த விவகாரம் பற்றி சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "2023ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அவரது உரையின் போது அசாதாரண சூழலை உருவாக்கியது, சட்டப்பேரவையோ அல்லது தமிழக அரசோ இல்லை.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையில் ஒருசில வார்த்தைகளை படிக்காமல் புறக்கணித்தார். இதனால் ஏற்பட்ட சலசலப்பை முதலமைச்சர் தனது மதிநுட்பத்தினால், சட்டமன்றத்தின் மாண்பை காப்பாற்றினார்.
இந்த நிகழ்வு, இந்தியா முழுவது உள்ள சட்டமன்றங்களின் நடவடிக்கைக்கு முன்னுதாரணமாகும்.
இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வின் மூலம் காத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்", என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil