2025 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர், அமைச்சர்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வருகை தந்து இருந்தனர்.
சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மரியாதையுடன் வரவேற்றார். கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த அதிமுகவினர் யார் அந்த சார்? என்ற பேட்ச் அணிந்து முழக்கமிட்டபடி வருகை தந்து இருந்தனர்.
அவை தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு ஆளுநர் உரை நிகழ்த்த இருந்த நிலையில் அரசின் உரையை நிகழ்த்தாமலே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையை விட்டு வெளியேறினார். இதற்கிடையில் ஆளுநருக்கு எதிராக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
சட்டப்பேரவையின் உள் ஆளுநரை சூழ்ந்துகொண்டு கோஷம் எழுப்பிய நிலையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறியதையடுத்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதன் பேரில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
தேசிய கீதம் இசைக்காததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது. சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு ஆகும்.
எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கடந்த முறையும் ஆளுநர் ரவி, அரசியல் விவகாரமாக ஆக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை அளித்த விளக்கப் பதிவை, சில நிமிடங்களில் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அந்த விளக்கப்பதிவில், " தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும்.
அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு வரியை மட்டும் படித்து விட்டு வெளியேறிய நிலையில் இந்த ஆண்டு உரையை படிக்காமலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதனிடையே,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக ஆளுநர் தமிழ்நாட்டின் மொழிம், கலாச்சாரம் மற்றும் மரபுகள் உட்பட தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் மீது தனது மாறாத அன்பு, மரியாதை மற்றும் போற்றுதலை மீண்டும் வலியுறுத்துகிறார்.
ஆளுநர் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ என்ற தமிழ் மாநில பாடலின் புனிதத்தை எப்போதும் நிலைநாட்டி ஒவ்வொரு நிகழ்விலும் பயபக்தியுடன் பாடுகிறார். உலகின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற மொழியான தமிழ் எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. ஆளுநர் இந்த உணர்வை முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறார். மாநிலத்திற்குள்ளும் தேசிய தளங்களிலும் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை மேம்படுத்துவதற்கு ஆளுநர் எல்லா வகையிலும் ஆதரவவு அளித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தை மதித்து அரசியல் சட்டக் கடமைகளை பின்பற்றுவது ஆளுநரின் கடமை. தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை கடமை. அது தேசிய பெருமைக்குரிய விஷயமாகும்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில சட்டசபையிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. தேசிய கீத விதிப்படி விதிமுறைப்படியும் இது கட்டாயம். பலமுறை நினைவூட்டல்களை முன்கூட்டியே தெரிவித்த பிறகும், இந்த கோரிக்கைகள் வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
இன்று 6.1.2025 ஆளுநர் முறையில் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமலோ அல்லது இசைக்கப்படாமலோ இருந்தபோது ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமைகளை மரியாதையுடன் நினைவூட்டி, தேசிய கீதம் பாடுவதற்கு அல்லது இசைப்பதற்கு முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அது திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது அல்லது இசைக்காமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார். ஆளுநர் அரசியலமைப்பை நிலை நிறுத்துவதற்கும் தமிழரின் பெருமையை நிலை நிறுத்துவதுடன் அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய கீதத்திற்கான மரியாதை மீட்டெடுப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.” ஆளுநர் மாளி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.