scorecardresearch

அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவு ரத்து செய்யப்படும்: ஐகோர்ட்

ஸ்ரீராம் சமாஜ் பள்ளி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மதரீதியான நடவடிக்கை நடந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவு ரத்து செய்யப்படும்: ஐகோர்ட்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபம் கடந்த 1954-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்த மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பு நிர்வாகித்து வரும் நிலையில், இந்த அழைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடந்து கடந்த 2013-ம் ஆண்டு இந்த மண்டபம் தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், ஸ்ரீராம் சமாஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர். அயோத்யா மண்டபம், நிர்வாகம் மாற்றம் தொடர்பான அரசு உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு அரசு தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டாத நிலையில், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது மேலும், எவ்வித காரணமும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீராம் சமாஜ் பள்ளி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மதரீதியான நடவடிக்கை நடந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

மேலும் பல வழிகளில் நிதி வசூல் செய்த இந்த அமைப்பின் வருவாய் விபரங்களை அரசிடம் தெரிவிக்கவில்லை என்றும். இந்த உத்தரவை எப்போது வேண்டுமானாலும் மேல் முறையீடு செய்யலாம் என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்றும், தனியார் அமைப்பான ஸ்ரீராம் சமாஜத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவையும், அந்த உத்தரவை உறுதி செய்த உத்தரவையும் ரத்து செய்ய இருப்பதாக கருத்து தெரிவித்த நீதிமன்றம், அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீராம் சமாஜம் வசம் ஒப்படைக்க இருப்பதாக கூறி, வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. முன்னதாக குற்றச்சாட்டுகளுக்கு முறையாக ஆதாரங்களை அளித்து, விளக்கம் கேட்டு தமிழக அரசு விசாரிக்கலாம் எனவும், விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள், தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu ayodhua mandabam issue judgement can tomorrow hc said

Best of Express