பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
மீனவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் ஆலிவ் ரெட்லி இன ஆமை குஞ்சுகள் சுமார் 1300 கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீசில் கடலில் விடும் நிகழ்ச்சி இன்று நடந்தது
ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஆலிவ் ரெட்லி இன ஆமைகள் கரையோரங்களில் முட்டை இட்டுச் செல்வது வழக்கம். இந்த முட்டைகள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு வனத்துறையினர் ஒவ்வொரு கடலோர கிராமங்களிலும் ஆமை குஞ்சுகள் பொரிப்பகம் என அமைத்து ஆமை முட்டைகளை சேகரித்து அங்கே பாதுகாத்து முட்டைகள் இருந்து வரப்படும் குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் அனுப்புவது வாடிக்கையாக உள்ளது.
இதற்கு தமிழக அரசு வருடத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ 5 லட்சம் ஒதுக்குகிறது. அது போன்று கடலூர் மாவட்டத்திற்கு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை ஒட்டி ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம் அதேபோன்று பிச்சாவரம் பகுதியில் முட்டையிடுவது வழக்கம். இந்த ஆண்டு சுமார் 20000 முட்டைகளை வனத்துறையினர் பாதுகாத்து ஆமை குஞ்சுகள் பொறிப்பக்கத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். நேற்றும் இன்றும் சுமார் 1300 ஆமைக்குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளி வந்தன.
இந்த ஆண்டு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வனத்துறையினர் ஆமை முட்டை கடலில் விடும் நிகழ்ச்சியை இன்று கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வனசரகர் அப்துல் ஹமீது மற்றும் பெரியார் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் இந்த ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 1300 ஆமைக்குஞ்சுகளை இன்று கடலில் விடப்பட்டது . ஆமை குஞ்சுகள் கடலை நோக்கி வேகமாக செல்வதை பார்ப்பவர்களின் கண்கள் ஆனந்தமானது.
ஆமைகள் கடலை தூய்மைப்படுத்தும் பணியை இடைவிடாமல் செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஆமைகள் மீனவர்களின் நண்பன் என்று மிக அழகாக மீனவ நண்பர்கள் கூறுவார்கள் ஏனென்றால் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பொழுது ஜெல்லி ஃபிஷ் மீன் குஞ்சுகளை முழுமையாக விழுங்கி விடும். இதனால் மீன் இனப்பெருக்கம் இருக்காது. ஜெல்லி பிஷ் ஐ ஆமைகள் சாப்பிட்டுவிட்டு ஜெல்லி பிஷ் இனத்தை அழைக்கின்றனர். இதனால் கடலில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். ஆகையால் மீனவர்கள் ஆமைகளை மீனவர்கள் நண்பன் என்று கூறுவார்கள்.
அதே போன்று கடலை தூய்மையாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு ஆமைகளுக்கு உண்டு. ஆனால் மனிதர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக கொட்டி கடலில் சுற்றுப்புற சூழலை குறைப்பதால் ஆமைகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஜெல்லி பிஷ் போன்று இருப்பதால். அதை ஆமைகள் உட்கொள்கின்றன இதனால் பல ஆமைகள் இருக்கின்றன எனவே மனிதர்கள் நாம் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதையும் , போடுவதையும் தவிர்க்க வேண்டும்.
அரசு, தன்னார்வ தொண்டு தொண்டு நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கலக்காமல் இருப்பதற்காக பல விழிப்புணர்வுகளை செய்து வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.