/indian-express-tamil/media/media_files/eFY5VaJGmML2UEhxCrAO.jpg)
செகுசு பேருந்து தீப்பிடித்து விபத்து
தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
கோவையை சேர்ந்த சொகுசு பேருந்து ஒன்று பயணிகள் இல்லாமல், ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகே, கெங்கலாபுரத்திற்கு வந்தபோது பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் என்ன என்று பார்ப்பதற்குள் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியுள்ளது. தீ பரவியதை பார்த்த ஓட்டுளர் மற்றும் நடத்துனர் இருவரும் உடனடியாக பேருந்தில் இருந்து குதித்து வெளியேறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிக்கப்பட்டது. 75 லட்சம் மதிப்பலான பேருந்து இந்த தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து காரணமாக பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#WATCH | Tamil Nadu: A private bus travelling from Bengaluru to Kerala caught fire in the Gengalapuram area on the Dharmapuri-Salem National Highway in Dharmapuri District. The driver and conductor who were travelling on the bus jumped down and saved their lives. pic.twitter.com/r0TOpH3d40
— ANI (@ANI) November 28, 2023
இதனிடையே இந்த பேருந்து தீப்பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.