திருச்சி உறையூர் பாய்க்கார தெருவை சேர்ந்த கதிர் ராஜா. இவர் திருச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளராகவும், பா.ம.க மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இதனிடையு இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மோட்டார் வாகனத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த திருச்சி உறையூர் போலீசார் அரசியல் போட்டியா? அல்லது முன் விரோதமா? என விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே மாநகராட்சி கவுன்சிலரும், காங்கிரஸ் பிரமுகருமான திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெக்ஸ் எனபவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்து வாகனத்தை கடத்திச்சென்ற சம்பவம் திருச்சியின் ஹாட்டாக்காக இருக்கின்றது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெக்ஸ் அலுவலகம் மற்றும் வீடு திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் ரோடு பகுதியில் உள்ளது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் படிக்கட்டு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். மர்ம நபர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி அவரது வீட்டு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், இருசக்கர வாகன திருட்டு குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் குற்றவியல் காவல் நிலையத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார்.
திருச்சியில் அரசியல் பிரமுகர்களின் இல்லங்களை குறிவைத்து நகர்த்தப்படும் திருட்டு, வண்டி எரிப்பு சம்பவங்கள் திருச்சி அரசியல் கட்சி பிரமுகர்களின் மத்தியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil