பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநில பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் பயோமெட்ரிக் முறைகளைப் பயன்படுத்தி வருகையை குறிக்க வேண்டும்.
உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தாமதமாக வருவதையும், "தகுதிவாய்ந்த அதிகாரியின் முறையான அனுமதியின்றி சீக்கிரம் வெளியேறுவதையும்" வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் பல்கலைக்கழகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் கெட்ட பெயரைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், மாணவர் அமைதியின்மை, வேலைநிறுத்தங்கள் மற்றும் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் "மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கசப்பான உறவு" ஏற்படக்கூடும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஊழியர்கள் தினமும் நிறுவனத்திற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் வருகையை பயோமெட்ரிக் கருவியில் குறிக்க வேண்டும்.
மேலும் கோப்புகளை அனுப்ப மின்னணு அமைப்புகளை பயன்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு துறை சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“