Advertisment

உ.பி. முதல்வர் குறித்த சர்ச்சை பதிவு : நடிகர் சித்தார்த் மீது புகார்

உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்ட சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
உ.பி. முதல்வர் குறித்த சர்ச்சை பதிவு : நடிகர் சித்தார்த் மீது புகார்

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது விமர்சனம் செய்த நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில்,  தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.5 கோடியை நெருங்கி வருகிறது. இதில் பல மாநிலங்களில் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஈடுகட்ட மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், உத்திர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றக்குறை இல்லை என்று அம்மாநில முதல்வது யொகி ஆதித்யாநாத் கடந்த இரு தினங்களுக்கு முன்பு (ஏப்ரல் 27) அறிவித்திருந்தார்.

ஆனால் அவரது அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சித்தார்த் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இதில்  மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தவறாக கூறுகின்றன அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என யோகி ஆதித்யநாத் ஏற்கனவே வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டிய சித்தார்த், “எவ்வளவு பெரியா ஆளாக இருந்தாலும் சரி பொய் சொன்னால் அறை விழும்” என்று பதிவிட்டிருந்தார்

சித்தார்த்தின் இந்த பதிவு பாஜக தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரின் ட்விட்க்கு பல முனைகளில் இருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் இந்த ட்விட் தொடர்பாக தனக்கு பல போன்கால்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் வருவதாகவும் சித்தார்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்ட சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார கலத்தின் மாநில செயலாளராக இருக்கும் ஆனந்தன் சென்னை கமிஷினர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில்,

நான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார கலத்தின் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறேன். சித்தார்த் என்ற நடிகர் உ.பி. முதல்வர் மாண்புமிகு யோகி ஆதித்யநாத்துக்கு சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததைக் கேட்டு நான் பயந்தேன். நடிகர் சித்தார்தின் ட்வீட் என்னை பயமுறுத்தியது.  இந்த ட்வீட் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது. அதைப் படிக்கும் நபர்களுக்கு ஆத்திரத்தை தருகிறது. அவர் ஏப்ரல் 27 மாண்புமிகு யோகிஜியின் செய்திக்குறிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார்.

சித்தார்தின் ட்வீட் :

"ஒரு ஒழுக்கமான மனிதர், ஒரு புனித மனிதர் அல்லது ஒரு தலைவர் என யாராக இருந்தாலும், பொய் கூறினால் அறை விழும் என்று பதிவிட்டிருந்தார்." சித்தார்தின் ட்விட்டர் பக்கத்தை  4.3 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார். இந்த ட்விட்ர் பதிவில், உ.பி. முதல்வரின் ஏப்ரல் 27 அறிவித்த செய்தி குறிப்புகள் குவித்த விமர்சனம் உள்ளது. இந்த ட்விட் இளைஞர்கள்  மனதை ஆத்திரமூட்டுகிறது, " மாண்புமிகு யோகி ஜி தமிழ்நாட்டில் கணிசமான இளைஞர்களின் தலைவராக உள்ளார். தயவுசெய்து கவனியுங்கள், இது உணர்வுகளின் சமூகம்.

அவர் உத்தரப்பிரதேச மாண்புமிகு முதலமைச்சரை மிரட்டுவதன் மூலம் கூடுதல் அரசியலமைப்பு அதிகாரத்தின் கிரிமினல் கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த நடிகரின் நோக்கம் தமிழ்நாட்டின் முக்கிய மத பிரிவுகளிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதாகும். சென்னை வெள்ளத்தின் முந்தைய காலத்திலும், அவரும் அவரது நண்பர்களும் சில தொல்லைகளை ஏற்படுத்தினர். இந்த சட்டவிரோத நடவடிக்கையால் பண பலன்களைப் பெறுவதற்கான ஒரு உள்நோக்கத்துடன் கூறப்பட்ட குற்றம். மாண்புமிகு யோகிஜியின் ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சித்தார்த் மற்றும் பின்னால் உள்ளவர்கள் மீது விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment