Advertisment

தமிழ்தாய் வாழ்த்து – ஆளுநர் விவகாரம்; உதயநிதி குறித்து எச்.ராஜா கடும் தாக்கு

தமிழகத்தில் திருமாவளவனுக்கு எங்கும் செல்வாக்கு இல்லை, தி.மு.க அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து 6 சீட் ஒதுக்கி உள்ளது – பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
H Raja BJP

நடிகர் விஜய் பெரியாரை பின்பற்றட்டும், இதன்மூலம் அவர் தனது நிறத்தை காட்டிக் கொள்வதை வரவேற்கிறேன். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என்று பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கடுமையாக தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சி பா.ஜ.க அலுவலகத்தில் இன்று மாலை திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல பகுதிகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

பா.ஜ.க அமைப்பு தேர்தல் மற்றும் கிளை கமிட்டி தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி முதல் நடைபெறும், அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் மண்டல கமிட்டி மற்றும் மாவட்ட அமைப்புக்கும் அதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய தலைமை தேர்வு நடைபெறும்.

தி.மு.க 62 ஆம் ஆண்டுக்கு முன்பு சென்று கொண்டிருக்கிறது, தி.மு.க.,வின் அயலக அணி போதைப்பொருள் கடத்த மட்டுமே வைத்துள்ளனர் என்று எண்ணினோம், ஆனால், தற்போது தேசவிரோத செயலாற்றும் அமைப்பாக உள்ளது.

இந்தியாவின் இரு மாநிலங்கள் இல்லாமல் ஒரு இந்திய வரைபடத்தை தி.மு.க அயலக அணியினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், தி.மு.க.,வில் சிறுபிள்ளைகள் தலையீட்டால் பல சிக்கல்கள் உருவாகி வருவதாக தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர், மக்களும் இதனை எண்ணி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் பற்றி பேசிய பேச்சு மோசமாக உள்ளது. இந்த வகையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க எதிர்வினை ஆற்றினால் என்னவாக இருக்கும் என தெரிவித்த எச்.ராஜா, தி.மு.க.,வின் தலைமை கீழ்த்தரமாக உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

62ல் நடக்காமல் போனது தற்போது தமிழகத்தில் நடக்கும், தேச விரோதிகள் கையில் தமிழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கையில் இருந்த சி.பி.ஐ (CBI), பா.ஜ.க.,வின் ஆட்சியில் தவறாக பயன்படுத்துவதில்லை, அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் தற்போது எடப்பாடி தரப்பினர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருமாவளவன் பட்டியல் சமுதாய மக்களுக்கான தலைவர் அல்ல, மாற்று சமுதாயத்தினரையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும், அந்நிய நாட்டின் கைக்கூலியாக தமிழகத்தில் இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

மேலும் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பும் தேவேந்திர குல சமுதாயத்தினர் திருமாவளவனை ஏற்பதில்லை, அவர் ஒரு மதமாற்ற தலைவராக செயல்படுகிறார். தமிழகத்தில் திருமாவளவனுக்கு எங்கும் செல்வாக்கு இல்லை, தி.மு.க அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து 6 சீட் ஒதுக்கி உள்ளது.

அப்போது மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் மட்டுமே செல்வாக்கு இருந்தது. ஆனால் திருமாவளவனுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. தி.மு.க கூட்டணியில் சலசலப்பு உள்ளது என்பது திருமாவளவன் மற்றும் செல்வப்பெருந்தகை பேசி வருவதில் தெரிகிறது.

சென்னையை வருண பகவான் காப்பாற்றி விட்டார், ஆபத்து இன்னும் நீங்கவில்லை. ரயில் விபத்துக்கள் கூடிவிட்டது என்பது தவறான தகவல், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ஆண்டுக்கு 121 விபத்துக்கள் நடந்தது, ஆனால், பா.ஜ.க.,வின் ஒன்பது ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 71 விபத்துக்கள் மட்டுமே நடைபெறுகிறது. ரயில்வே துறையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டினால் நிவர்த்தி செய்யப்படும்.

அமைப்பு தேர்தல்கள் நடத்தவேண்டி உள்ளதால் தற்போது பா.ஜ.க தரப்பில் ஏதும் போராட்டங்கள் நடைபெறவில்லை,

தமிழகத்தில் கோவில் சொத்துக்களை ஆட்டையபோடும் கட்சி என்றால் அது தி.மு.க கட்சி என்பது மாவட்டம் தோறும் நடைபெறும் செயல்கள் மூலம் தெரிய வருகிறது.

நடிகர் விஜய் பெரியாரை பின்பற்றட்டும், இதன்மூலம் அவர் தனது நிறத்தை காட்டிக் கொள்வதை வரவேற்கிறேன். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.

கேரளாவில் பா.ஜ.க மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் ஒரு முடிந்துபோன சகாப்தம்.
தமிழக காவல்துறை ஒரு பயங்கரவாதியை கூட கைது செய்யவில்லை, கஞ்சாவை பறிமுதல் செய்யும் போலீஸ் மற்ற வகை போதைபொருட்களை கைப்பற்றுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்நிகழ்வில் பா.ஜ.க மாநில, மாவட்ட- மாநகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bjp Trichy raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment