Tamilnadu News Update : தனது காருக்கு தானே தீ வைத்துவிட்டு யாரோ மர்மநபர்கள் தீ வைத்துவிட்டதாக நாடகமாடிய பாமக மாவட்ட செயலாளர் சதீஷ்குமூர். என்பவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளராக இருப்பவர் சதீஷ்குமார். இவர் மதுரவாயில் கிருஷ்ணா தெருவில் வசித்து வருகிறார். இந்நலையில், கடந்த 14-ந் தேதி இரவு அப்பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக மதுரவாயில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் யாரோ மர்மநபர்கள் தனது காரை தீவைத்து எரித்துவிட்டு சென்றுவிட்டதாக சதீஷ்குமார் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்த கேமராவில் கிடைத்த ஆதராங்களை வைத்து விசாரணை நடத்தியபோது, பாஜக மாவட்ட செய்லாளர் சதீ்ஷ்குமாரே தனது காரி எரித்துவிட்டு, நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் காரை விற்றுவிட்டு நகை வாங்கி கொடுக்கும்படி மனைவி தொல்லை கொடுத்ததால் காரை எரித்ததாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285ன்- தீப்பற்றக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே மெத்தனமாக கையாளுதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
மனைவின் தொல்லை தாங்க முடியாமல், பாஜக பிரமுகர் தானே தனது காரை எரித்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“