BJP 3 Functionaries expelled In Sivagangai District : பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவை விமர்சனம் செய்த 3 செயல்பாட்டாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியில் முன்னாள் தேசிய செயலாளா எச்.ராஜா அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ் மங்குடிக்கு எதிராக தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து தனது தோல்விக்கு கட்சியினர் சரியாக செயல்படாததே காரணம் என்று கூறிய எச்.ராஜா கட்சியின் நிர்வாகிகள் தனது ஆதரவாக தோதலில் பணிகளில் ஈடுபடவில்லை என்று குற்றம் சாட்டியினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த முக்கிய நிர்வாகிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு கட்சியில் இருந்து வெளியேறினர். மேலும் சில நிர்வாகிகள், ராஜாவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் எச்.ராஜாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரைக்குடி மாவட்டத்தின் மூன்று பிரிவு செயற்பாட்டாளர்கள் கட்சி மற்றும் அடிப்படை உறுப்பிளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அறிவித்துள்ளது.
இது தொடாபாக கட்சியில் பொதுச் செயலாளர் கரு நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குன்னாகுடி மண்டலத் தலைவர் என் பிரபு, காரைகுடி மண்டலத் தலைவர் கே.சந்திரன், சக்கோட்டை தெற்கு மண்டலத் தலைவர் கே.பாலமுருகன் ஆகியோர் கட்சி விதிகளை மீறியதற்காகவும், கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காகவும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீக்கப்பட்ட மூவருடனும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் என யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாக கரு நாகராஜன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார், மாநிலத் தலைவர் எல் முருகனின் ஒருமித்த கருத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil