பாஜகவின் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் தற்போது கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையல், மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே என்னை கட்சியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இருந்தார் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், பாஜகவில் உட்கட்சி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காசியில் தொடங்கிய தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இந்த உட்கட்சி பூசலை வெளியில் கொண்டு வந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியுடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காசியில் தமிழ சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதே சமயம் தமிழக பாஜகவின் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை. இதனிடையே கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். மூத்த நிர்வாகிகள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறிய காயத்ரி ரகுராம், தான் இத்தனை வருமாக கட்சியில் இருந்தும் ஒரு பெண் என்றும் கூட பாராமல் தன்னை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும் பாஜக நிர்வாகி ஒருவர் காயத்ரி ரகுராம் பெயரை குறிப்பிடாமல், தலைவர் அண்ணாமலை சொல்லதை கேளுங்கள் இல்லை என்றால் டிவி நிகழ்ச்சிக்கு செல்லுங்கள் என்றும் பதிவிட்டிருந்தாக கூறப்படுகிறது. இதற்கு பதில் தரும் விதமாக காயத்ரி ரகுராம் தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவரை தாக்கும் விதமாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
He always wanted me out from day one. I will come back stronger.
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) November 22, 2022
இதனால் தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கலங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாக சில நிமிடங்களில் தான் இதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்ட காயத்ரி ரகுராம் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், பாஜக தலைவர் அண்ணாமலை தான் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற விரும்பினார். நான் பாஜகவுக்கு எதிரானவள் என்பதை ஏற்க மாட்டேன். அப்படி யார் சொன்னாலும் அடிப்பேன்.
I will not accept that I’m against BJP party. I will smack anyone who says that. No individual is a party. This is how power can take any decision without an enquiry ;)
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) November 22, 2022
எந்த ஒரு தனிமனிதனும் ஒரு கட்சி அல்ல. விசாரணையின்றி அதிகாரம் எந்த முடிவையும் எடுப்பது இப்படித்தான். கட்சி பொறுப்பு இல்லை என்றாலும் நான் பாஜக தான். இது குறித்து மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக கூறுவேன். நான் மீண்டும் வலுவாக திரும்பி வருவேன் என்று கபதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.