தமிழக பாஜகவில் இருந்து சமீபத்தில் நிக்கப்பட்ட நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் பதவிக்கு தற்போது இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜகவில் சமீபகாலாக உட்கட்சி பிரச்சினை பெரிய விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், திருச்சியில் பாஜக நிர்வாகிகள் சூர்ய சிவா மற்றும் டெய்சி ஆகியோர் தரம்குறைந்த வார்த்தைகளை பேசிய ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கட்சியின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதாக கூறி நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தலைவர் அண்ணாமலை பதவியேற்ற முதல் நாளில் இருந்தே தன்னை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும், காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வர்ச்சிப்பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இதனிடையே காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் வகித்து வந்த வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப்பிரிவு தலைவர் பதவிக்கு இசைமைப்பாளர் தீனா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலச் இசையமைப்பாளர் தினா அவர்களும் மாநில துணை தலைவர் ஆனந்த் மெய்யாச்சாமி அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.

தமிழில் 1996-ம் ஆண்டு வெளியான வசந்த வாசல் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தீனா, ஆணை, கிங், திருடா திருடி, திருப்பாச்சி, வல்லக்கோட்டை, பவானி ஐபிஎஸ், மேதை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சூழ்நிலை என்ற படத்தில் நடித்துள்ள தீனா 2021ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil