Advertisment

ஸ்டாலின் இமேஜ் 6 மாதங்களில் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை பேட்டி

இந்த இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

author-image
WebDesk
New Update
Stalins letter to Home Minister Amit Shah regarding Aavins issue

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் மறைந்த எம்எல்ஏ. ஈவெரா திருமகனின் அப்பா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதேபோல், நாம் தமிழர் கட்சி, அமமுக, உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், பாஜக போட்டியிடுமா அல்லது அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. அதேபோல் தற்போது ஒபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக இருக்கும் அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது தொடர்பான பரபரப்பும் நிலவி வந்தது.

இதனிடையே இன்று காலை அதிமுகவின் இபிஎஸ் அணி தங்களது வேட்பாளரை அறிவித்தது. இதனால் பாஜக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது இந்’த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் பணிமனையிலும், தேசிய முற்போக்கு கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதிமக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

இதனிடையே மாலை 5 மணிக்கு ஒபிஎஸ் தரப்பு தங்களது வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கூட்டணி தலைவர்களுடன் என்ன பேசினோம் என்பதை சொல்வது நாகரிகம் இல்லை. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இதுவரை ஆளும்கட்சியே பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் வெற்றி பெற்றுள்ளது. எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன் பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. இது குறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை அரசு நடத்தியதா அல்லது தி.மு.க நடத்தியதா என தெரியவில்லை. அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என தான் பேசியுள்ளார்கள். அரசு மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும்.

அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு (2022 ஆகஸ்ட்) முன்பு, இந்திய டுடே எடுத்த சர்வேயில், 60 சதவீதம் வாக்குகள் பெற்று இதில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்தார். அப்போது இந்தியா டுடே சர்வே பாருங்கள் என்று திமுகவினர் அதிகமாக கூறினார்கள். ஆனால் அதே 6 மாதங்கள் கழித்து ஜனவரி 26-ந் தேதி இந்தியா டுடே நடத்திய சர்வேயில், வெறும் 44 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளார்.

இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் 6 மாதங்களில் 16 சதவீதம் பின்தங்கியுள்ளார். அதனால் தான் அறிவாலையத்தில் உள்ள சகோதர சகோதரிகள் இந்தியா டுடே என்ற வார்த்தையை கேட்டால் அலறுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் ஏற்கெனவே கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை ஆகும்.

எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தி.மு.க கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் இந்த கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் (தென்னரசு) பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே, எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டம் அரசு நடத்தியதா அல்லது தி.மு.க நடத்தியதா என தெரியவில்லை.

அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என தான் பேசியுள்ளார்கள். அரசு மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும். தி.மு.க தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தப் போகிறது.

இடைத்தேர்தல் என்பது எந்த கட்சியின் பலத்தையும் நிரூபிப்பதற்கானது அல்ல. பேனா சிலை விவகாரத்தில் தமிழர்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதிமுக இபிஎஸ் அணி கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment