/indian-express-tamil/media/media_files/uKCiQmgZiMlTLS2VNhWY.jpg)
அண்ணாமலை
கோவை பாஜக பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, தேர்தல் களம் போல்கோவை சூடாக உள்ளது.உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை தமிழகம் வருகிறார். தேனி, மதுரை சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி செல்கிறார்.பிரதமர் குறுகிய காலத்தில் தமிழக வர உள்ளார்.
சீமான் தினம் ஒரு வார்த்தை, தத்துவோம் என பேசுகிறார். டெல்லியில் சீமான் அப்பளை செய்யாமல் சின்னம் கிடைக்காததால் கோபத்தில் பேசுகிறார்.அவர் தவறு செய்து விட்டு எங்கள் மீது பலி போடுகிறார்.முதல்வர் அப்போ அப்போ தமிழகத்தில் எட்டி பார்க்கிறார்.நேரடியாக முதல்வர் களத்திற்கு வராததினால் கொள்ளையடிப்பது மட்டும் முழு வேலையாக அமைச்சர்கள் பார்க்கிறார்கள்.பிரதமரின் ரோட்ஷோ முக்கிய நகரத்தில் நடக்க உள்ளது.பிரதமர் உழைக்க கூடிய செயலை தமிழக முதல்வர் செய்யவில்லை.
பணம் அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்கின்றனர். 2024 ல் பொய் வேசம் போடுகின்றனர் திமுக.கச்சத்தீவு விவகாரம் நாங்கள் கையில் எடுத்த பின்பு மக்களுக்கு உண்மை தெரிந்துள்ளது.ஜனநாயக கடமையை செய்துள்ளோம். மீனவ மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு உண்மை தெரிந்துள்ளது. தந்தை பெயர், தாத்தா பெயர், வைத்துகொண்டு கொச்சையாக பேசும் உதயநிதிக்கு, தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்.
நாளை முதல் அவரை ட்ரக்ஸ் (போதை) உதயநிதி ஸ்டாலின், என கூப்பிடுகிறோம். கிராமத்தில், நகரத்தில், சம்பாதித்து டி.ஆர்.பி ராஜாவிற்கு வியர்வை சிந்தி இருக்கா?. அவர் அப்படித்தான் பேசுவார். எங்களுக்கு நடிக்க தெரியாது, எல்லா இடங்களிலும் இப்படி தான் பேசுவோம்.இலங்கையை பொறுத்தவரை அவர்கள் பிரச்சனை செய்யவில்லை, 2014 வரை துப்பாக்கி சூடு மீனவர்கள் இறந்தார்கள், திமுக எங்கள் மீது பழி சொல்கிறார்கள் ,
கச்சத்தீவு குறித்து ஒரு திமுக அமைச்சர் ஆர் டி ஐ ரெக்கார்டு நாங்கள் அடிசோம் என்று சொல்கிறார்கள்,படித்த அமைச்சர். திமுக பணத்தை வைத்து கொங்கு மண்டலத்தை வென்று விடலாம் என நினைக்கிறார்கள் அது நடக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.