/tamil-ie/media/media_files/uploads/2023/01/Annamalai-2.jpg)
எம்.பி. டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை நான் எடிட் செய்து வெளியிட்டேன் என்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றார். இந்த பாத யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில்,
புனித யாத்திரையை வானதி ஈச்சனாரியில் இருந்து ஆரம்பிக்கிறார். கொங்கு பகுதியில் இருந்து பா.ஜ.க வளர 3 நாட்கள் நடை பயணமாக பழனி செல்கிறார். அக்கா 150 கிலோ மீட்டர் நடக்கிறார். அதிக உறுதியுள்ள பெண்மணி. நான் வெளியில் இருந்து ரசித்து பார்த்துள்ளேன். அவருக்கு போகும் வழியில் வரவேற்பளிக்க தயாராக உள்ளார்கள். சரித்திர பயணமாக புனித பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/image-816.png)
மேலும், ராகுல் காந்தி நடைப்பயணத்தில் எந்த எழுச்சியும் மக்கள் பார்க்கவில்லை. திமுக அமைச்சர் கல்லெடுத்து எரிகிறார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மேடையில் தொண்டரை ஒரு அமைச்சர் அடிக்கிறார். பின்னர் நேற்று பிஜேபி இரண்டு வீடியோ வெளியிட்டது. இதை திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோ புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் வெளியிட்ட வீடியோ கட் பண்ணாதது.
அதில் டி.ஆர் பாலு கோவிலை இடிப்பதை பெருமையாக பேசுகிறார். இந்த வீடியோவை மார்பிங் செய்ததாக எ.வ வேலு சொல்கிறார். அவருக்கு நான் சேலஞ்ச் பண்ணுகிறேன். வீடியோ ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம். கே.என் நேரு மற்றொரு அமைச்சரை கேவலமாக பேசுகிறார். தாழ்த்தப்பட்டவர்கள் வந்தால் எப்படி பேசுகிறார். நாளை காலை தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் புட்டேஜ் கொடுக்கிறார்கள்.
அதை எடிட்டிங் என ப்ரூ பண்ணினால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். அதேபோல் அந்த வீடியோ உண்மை என்றால் முதல்வர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்
சேலத்தில் கோவிலுக்குள் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் எப்படி தடுக்கப்பட்டார் என்பதை பார்த்தோம். திமுக காரரே தடுக்கின்றனர். கேட்டால் சமூக நீதி என்கின்றனர். திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச என்ன அருகதை உள்ளது. போலீசார் மீது ஏன் எஸ்.சி, எஸ் டி அட்ரா சிட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை. பட்டியலினத்தவர் கோவிலுக்குள் போக முடியாதா?
/tamil-ie/media/media_files/uploads/2023/01/image-817.png)
புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 நாள் ஆகியும் மலம் கலந்த வரை கண்டுபிடிக்க முடியவில்லை. நாளையிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிப்போம். போட்டியிடும் வேட்பாளர் வலிமை பொருந்தியவராக இருந்து எதிர்க்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஸ்ட்ராங்கான வேட்பாளர் நிற்க வேண்டும்.
பாஜகவிற்கான தேர்தல் இது இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024. அதேபோல் அடுத்து தாக்கல் செய்யப்பட உளள் பட்ஜெட் தொழில்துறைக்கான பட்ஜெட். தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பட்ஜெட். பிபிசி ஆவணப்படம் யார் வேணாலும் போடட்டும். அது பொய் செய்தி. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முழுக்க பொய் என தெரிவித்துள்ளார்.
வேலையில்லாத நான்கு பேர் ஸ்கிரீனை போட்டு மக்களுக்கு காட்டுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்த பின்பு மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். குறை சொன்னவர்கள் எல்லாம் ஜெயிலில் உள்ளனர். தயவு செய்து திரையிடுங்கள். தியேட்டரில் போடுங்கள்.இது பிரபகண்டா மெட்டீரியல். பிபிசி இந்திய திருநாட்டை கலங்கப்படுத்துகிறது. நாங்கள் வீடியோவை தடுக்க திமுக கிடையாது. பார்க்க மக்கள் இல்லை. நாட்டு மக்களுக்கு எல்லாம் தெரியும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/image-819.png)
எ. வ.வேலு ஆடியோவை இல்லை என சொல்லட்டும். இது நேரு, ஈ.வி.கே.எஸ் இருவரும் பேசும் ஆடியோ. தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. காஸ்ட் ஆர்பிட் ரேஞ்ச் , வெளியே இருந்து வரக்கூடியவர் குறைவான சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலை செய்யும் பொழுது கிடைக்கிறது. இன்னும் 10 ஆண்டில் வட மாநிலத்தவர் வர மாட்டார்கள். பெங்களூரில் வெளியே போங்கள் என்று சொன்னால் நம்ம மக்கள் எங்கு போவார்கள். இன்னும் பத்து வருடத்தில் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆள் கிடைக்காது.
ராஜ்பவனில் முதல்வரும் ஆளுநரும் ஒன்றாக கம்பீரமாக நடந்து வந்தார்கள். முதல்வர் எங்கள் முதலமைச்சர் , தமிழ்நாட்டு முதலமைச்சர். கவர்னரும் முதல்வரும் சுமூகமாக இருக்கிறார்கள்.விமர்சனம் செய்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது. தொண்டர்கள் ஆபாசமாக பேசக்கூடாது என இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன். நான் கமெண்டுக்கு பதில் சொன்னால் முழு நாளும் பதில் சொல்ல வேண்டும்.
கர்நாடகாவில் தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஸ்டடி பன்னி வரவேண்டும். ஒரு சென்ட் நிலத்தை நீங்களாக எடுத்து உள்ளீர்களா. கோர்ட் உத்தரவுபடி எடுத்துள்ளீர்கள். குலதெய்வ கோயிலுக்குள் இந்து சமய அறநிலை துறை போக நியாயம் இல்லை. இந்த விவகாரத்தில் மக்களுக்கு எழுச்சி வரப்போகுது. இந்தத் துறை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.