Advertisment

சரித்திரத்தில் இருக்கு... மன்னிப்பு கேட்க முடியாது : அண்ணா குறித்து பேச்சுக்கு அண்ணாமலை பதில்

தமிழகத்தில் மது ஒழிப்பதற்கு இலக்கணம் அண்ணா, குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா. அண்ணாவை தரைகுறைவாக நான் விமர்சிக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Annamalai Coimbatore

அண்ணாமலை- கோயம்புத்தூர்

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

Advertisment

33"சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காலங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலத்திற்கு பிறகு இச்சட்டம் நிறைவேறியுள்ளது. சென்செக்ஸ் முடிந்ததும் அடுத்து வரும் தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு அமலில் வரும். பாஜக கட்சிக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது.இதை பெண்கள் உரிமையாக பாஜக பார்க்கிறது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

வெகு விரைவில் 33 சதவீதத்திற்கு மேல் பெண்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். ஏக மனதாக அனைத்து கட்சிகளும் இதனை வரவேற்றுள்ளனர். இரண்டு முறை இதற்கு முன்பு நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீட் உயர்த்தியுள்ளோம் இதில் ஸ்டாலின் சொல்வது போல எந்த சதியும் இல்லை. சதி என்ற வார்த்தையை முதல்வர் எப்படி பயன்படுத்தலாம்? .அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சனை இல்லை பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் பிரச்சனை இல்லை.

அதிமுகவில் உள்ள சில தலைவர்களுடன் அண்ணாமலைக்கு பிரச்சனை இருக்கலாம். மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்கள் கூட்டணியில் உள்ளனர். செல்லூர் ராஜூ சொல்வது போல் மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி என நான் எப்படி அறிவிக்க முடியும்? எனது தன்மானத்தை கேள்விக் குறியாக்கினால் பேசுவேன் அது எனது உரிமை. தன்மானத்தை விட்டு தந்து அரசியல் செய்ய மாட்டேன்.

எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை. அதிமுக தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகள் வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள். தமிழகத்தில் மது ஒழிப்பதற்கு இலக்கணம் அண்ணா, குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா அண்ணாவை தரைகுறைவாக நான் விமர்சிக்கவில்லை.எந்த கட்சிக்கும் இந்த கட்சி போட்டியில்லை, பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே இலக்கு. என் கட்சியை நான் வளர்க்கிறேன் திமுக விஷம் திமுகவை அடியோடு வெறுக்கிறேன். பேச்சிற்கு பேச்சு நான் பேச விரும்பவில்லை அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது, அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை தான் பேசுகிறேன்.

மோடியை ஏற்றால் கூட்டணி இருக்கும் குறிப்பாக சனாதனம் எங்கள் உயிர் நாடி. சனாதனம் வாழ்க்கை கோட்பாடு சனாதன தர்மம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவார். இந்தியா கூட்டணியில் 5 மாநிலங்களில் கூட்டணி இல்லை. அக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் எனத் தெரியாது. நான் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் நான் இப்படியே தான் இருப்பேன் என இவ்வாறு தெரிவித்தார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment