திமுக தலைவர்கள் மீதான ஊழல் புகாரை வெளியிட்டார் அண்ணாமலை. அவர் வெளியிட்ட வீடியோவில், அமைச்சர் ஏ.வ வேலு, அன்பில் மகேஷ், கே.என். நேரு, டி.ஆர் பாலு, துரை முருகன், கதிர் ஆனந்த், காலாநிதி வீராசாமி, உதயநிதி ஸ்டாலின் அகியோரின் சொத்து பட்டியல் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்தும் பாஜக தரப்பில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு திமுக பதில் விமர்சனங்கள் கொடுத்து வருவதால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.
இதில் குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக ஊழல் குறித்து அடுக்கடுக்கான பல புகார்களை ஆதராத்துடன் வெளியிட்டு வருகிறார். இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் திமுக தரப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் விலை என்ன பில் எங்கே என்பது போன்ற கேள்விகள் இணையத்தில் ட்ரெண்டானது.
இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த அண்ணாமலை ஏப்ரல் மாதம் வாட்ச் பில் வரும் என்று கூறி அதே மாதத்தில் திமுக மூத்த தலைவர்கள் பற்றி ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு தினமான நாளை (ஏப்ரல் 14) காலை 10.15 மணிக்கு திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட உள்ளதாக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
DMK Files
— K.Annamalai (@annamalai_k) April 13, 2023
April 14th, 2023 – 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0
திமுக ஃபைல்ஸ் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, எம்பி கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி, துர்கா ஸ்டாலின், அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக ஃபைல்ஸ் காலை 10.15 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புரோமோ தமிழக அரசியல் சூழலில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். தனது ரபேல் வாட்ச் விவரத்தை அவர் வெளியிட்டார். மேலும் 15 நிமிடங்கள் கொண்ட வீடியோவை அவர் வெளியிட்டார். இதில் திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள், திமுக கட்சியில் உள்ளவர்கள் நடத்தும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் விவரங்கள் இடம் பெற்றது. அவர் வெளியிட்ட வீடியோவில், அமைச்சர் ஏ.வ வேலு, அன்பில் மகேஷ், கே.என். நேரு, டி.ஆர் பாலு, துரை முருகன், கதிர் ஆனந்த், காலாநிதி வீராசாமி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சொத்து பட்டியல் இடம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“