2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, ராஜஸ்தான, மத்தியபிரதேசம், சத்திஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
இதனிடையே பாஜகவின் இந்த தேர்தல் வெற்றி அடுத்து வரும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திரமோடி பிரதமர் ஆவார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதைப் பிரதிபலிக்கிறது. இதன் மூலம் இந்தியா கூட்டணியின் பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து 18 ஆண்டுகால ஆட்சிக்கு ஆதரவாக சமூக நல நடவடிக்கைகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மக்கள் காங்கிரஸ் கட்சியை அவர்களின் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் நிராகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தெலுங்கானாவில் 2018-ல் வெறும் 6.9 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி பெற்றிருந்த பாஜகவின் தற்போதைய வாங்கு வங்கி 13.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தொடரும் என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“