2024-ம் ஆண்டில் பா.ஜ.க அற்புதமான கூட்டணியுடன் மக்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். கூட்டாட்சி என்று சொல்லி இருக்கிறோம். எங்களுக்கு பங்காளி கூட்டணி தேவையில்லை. நாங்கள் மாமன் மச்சான் கூட்டணி என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுன்ற தேர்தல் உள்ளிட்ட சில தேர்தல்களில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் போட்டியிட்டது. இதில் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில், இரு கட்சியினரும் மாறி மாறி மற்றவர்களை குறை சொல்ல தொடங்கியதால், கூட்டணியில், விரிசல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்த்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க அதிரடியாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இரு கட்சியும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்துக்கொண்ட நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில இருந்த பா.ம.க உள்ளிட்ட முக்கிய கட்சிகயை தன்பக்கம் இழுத்துக்கொண்டது பா.ஜ.க.
அதே சமயம் அ.தி.மு.க தே.மு.தி.க கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிட்டது தொடர்பாக அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து வருவதும், அதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்து வருவரும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 2024-ம் ஆண்டில் பா.ஜ.க அற்புதமான கூட்டணியுடன் மக்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். கூட்டாட்சி என்று சொல்லி இருக்கிறோம். எங்களுக்கு பங்காளி கூட்டணி தேவையில்லை. நாங்கள் மாமன் மச்சான் கூட்டணி. எல்லோரும் இணைந்து அக்கா தங்கைகள் மாமன் மச்சானாக இருந்து, தமிழகத்தை வளப்படுத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது மாமா மச்சான் கூட்டணி.
மாமா மச்சான் கூட்டணி என்றால் வேற்றுமையில் ஒற்றுமை. ஜாதி, மதம் இனம் கிடையாது. பங்காளி என்றால் ஒரே இனமாக இருக்கும். ஆனால் மாமா மச்சான் என்றால் இனம் என்று இல்லை. இஸ்லாமியரையே நான் மாமா என்று தான் சொல்கிறேன். அதனால் மாமா மச்சான் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பங்காளி கூடடணிக்கு நான்தான் என்ற அதிகாரம் இருக்கும். அதனால் மாமா மச்சான் கூட்டணியான என்.டி.ஏ கூட்டணிக்கு எல்லோரும் வாருங்கள்.
நல்ல ஒரு மண்ணில் இருந்து இந்த வார்த்தையை சொல்கிறோம். நல்ல ஒரு வார்த்தையாக 2026 தமிழக சட்டசபை தேர்தலில், இந்த மாமன் மச்சான் என்ற வார்த்தை அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.