மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெறவில்லை என்று கூறியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில முதல் அமைச்சர்கள் பங்கேற்கும் நெட்டிஆயோ கவுன்சில் மீட்டிங்கை புறக்கணிப்பதாக கூறியுள்ளது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இந்தியாவில் பா.ஜ.க அரசு 3-வது முறையாக பதவியேற்றதை தொடர்ந்து முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பட்ஜெட், பெண்களுக்கு, குழந்தைகளுக்க நடுத்தர மக்களுக்கு, விவசாய பெருங்குடி மக்களுக்கு என எல்லோருக்கும் ஒரு சிறப்பு செய்வதாக அமைந்துள்ளது. அதேபோல் இளைஞர்களுக்கும் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
அதே சமயம் வழக்கம்போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த பட்ஜெட் சரியில்லை, தமிழகத்தை புறக்கணித்திருக்கிறார்கள். அதனால் இந்த வாரம் நடைபெற உள்ள நெட்டிஆயோ கவுனிங் கவுன்சில் மீட்டிங்கை புறக்கணிப்பதாக கூறியிருக்கிறார். முதல்வர் இவ்வாறு கூறுவது புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2022- மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளும் நடைபெற்ற மீட்டிங்கில் கூட மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. 2024-ம் ஆண்டு மீட்டிங்கிலும் புதிய சாக்குபோக்கு சொல்லி நழுவிவிடலாம் என்று நினைக்கிறார்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழக முதல்வர் இந்த மீடடிங்கிற்கு சென்று, தமிழக மக்கள் சார்பாக, பேசி, நாம் எங்கே இருக்கிறோம், என்பது குறித்து பேச வேண்டும். மிக முக்கியமாக வருத்திற்கு ஒருமுறை இந்தியாவில் இருக்கும், முதல்வர்களும் அமர்ந்து பேசக்கூடிய ஒரு மீட்டிங்கில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பார். இதில் பங்கேற்காமல் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கும் காரணத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை என்று அவர் சொல்லி இருக்கிறார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுடிருக்கும் பட்ஜெட்டின் மதிப்பு 48,20,512 கோடி. இந்த நிதியை தமிழகத்தில் உள்ள மக்களுக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். இதற்கு முன்பு யு.பி.ஏ அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை எத்தனை முறை வந்திருக்கிறது? அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் எத்தனைமுறை பட்ஜெட் கொடுத்திருக்கிறார்?
காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் குறிப்பில் தமிழ்நாடு (2004-2014)
2004-05 பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெறவில்லை. 2005-06 மற்றும் 2006-07 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை. 2007-08 (54 கோடி)ஆண்டில் 2 முறையும், 2008-09 (300 கோடி) ஆண்டில் ஒருமுறையும் இடம்பெற்றிருக்கிறது. 2009-10 -ல் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. 2010-11 (200 கோடி) ஆண்டு ஒருமுறை மட்டும் இடம்பெற்றுள்ளது. 2011-12, 2012-13 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தின் பெயர் பட்ஜெட் குறிப்பில் இடம்பெறவில்லை. 2013-14-ல் (7500 கோடி) ஒருமுறை மட்டும் இடம்பெற்றுள்ளது.
பா.ஜ.க. ஆட்சியில் பட்ஜெட் குறிப்பில் தமிழ்நாடு (2014-2024)
2014-15 (129 கோடி)பட்ஜெட் குறிப்பில் தமிழ்நாடு என்ற பெயர் 2 முறை மட்டும் இடம்பெற்றுள்ளது. 2015-16 ஆண்டு (2021 கோடி) ஒருமுறை மட்டும். அதன்பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 2021-22 (103000 கோடி) ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் ஒருமுறை தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெற்றுள்ளது இந்த குறிப்பை அண்ணாமலை தனது வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
TN CM Thiru @mkstalin is the most vindictive CM whose governance track record over the last 3 years borders near zero, has been afraid to go to Niti Aayog meetings for the last 2 years citing flimsy reasons, and now has the audacity to lecture on governance to our Hon. PM Thiru… pic.twitter.com/zUwGyhvqY9
— K.Annamalai (@annamalai_k) July 24, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.