கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க பா.ஜக. ஆகிய இரு கட்சிகளும், அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதால், அதிமுகவில் இருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், இந்த கூட்டணியில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
மதுரை வேலம்மாள் கல்லூரி பிறந்தநாள் மாளிகையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், டாஸ்மாக் அதிகாரிகளின் இடத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், அமலாக்கத்துறை சோதனைக்கும், பா.ஜ.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தேவையில்லால் அவர்கள் சோதனை நடத்தப்பட்டார்கள். தவறு இருந்தால் தான் சோதனை நடக்கும். தற்போது அமலாக்கத்துறை சோதனை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அது குறித்து தெரிந்துகொண்டு அதன்பிறகு பதில் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து 2031, 2036 ஆண்டுகளில், தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், ஆட்சி அமைப்பது குறித்து யார் எது சொன்னாலும், தீர்ப்பை மக்கள் தான் கொடுப்பார்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கும்போதே இதை கூறியிருந்தார். சொன்னபடி தொடர்ந்து வெற்றி பெற்றார். அவரைபோல், மு.க.ஸ்டாலின் கூறினாலும், ஆட்சி அமைக்கும் முடிவை மக்களே தீர்மானிப்பார்கள் என்று கூறி நயினார் நாகேந்திரன், சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்திக்காததால், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷா வேறு வேலையாக வந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.
ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருப்பதால், அவர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், அதிமுக உட்கட்சி விவகாரம், தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இ.பி.எஸ் பொதுச்செயலாளராக இருக்கிறார். வழக்கு முடிந்தபின் இது குறித்து பேசலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.