சென்னை பாரிமுறையில் உள்ள பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் காளிகாம்பாள் கோவில் ஒன்று அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் தனியார் வசம் இரந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதன் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக இந்து அறிநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு புதிய தக்கார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் கோவிலை பராமரிப்பு செய்து வந்த தனியார் தரப்பினர் இந்து அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தக்கார் நியமனம் குறித்து விளக்கம் கேட்டு இந்து முன்னணி அமைப்பினர் கோவிலுக்குள் நுழைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டளனர்.
இந்த போராட்டத்தில், தமிழக பா.ஜ.க.வின் ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவினரும் பங்கேற்று தமிழக இந்து அறநிலையத்துறைக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு பணிக்காக 50-க்கு மேற்பட்ட போலீசார் கோவிலுக்கு முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30 பேரை போலீசார் 30 கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இது குறித்து கோவிலை பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்த விஸ்வகர்மா சனாதன தர்ம என்ற தனியார் அறக்கட்டளையினர் 3 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தி அறங்காவலரை நியமித்து வருகிறோம்.
தற்போதைய அரங்காவலர் குழுவின் பணிக்காலம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி முடிந்துள்ள நிலையில், அடுத்து வரும் ஏப்ரல் மாதம் வரை புதிய அறங்காவலரை தேர்வு செய்ய கால அவகாசம் உள்ளது. ஆனால் இந்து அறநிலையத்துறை கோவிலுக்கு புதிய தக்காரை நியமித்துள்ளது. இது குறித்து நாங்கள் கேட்டபோது, எங்கள் கோரிக்கைகளை கருத்தில் எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“