ஆளுனர் வெளியேறிய போது பொன்முடி செய்தது பெரிய தவறு: கன்னியாகுமரியில் குஷ்பூ பேட்டி

கோவிலுக்கு போக வேண்டாம் என்று கூறுபவர்களும் தேர்தல் நேரத்தில் கோவிலுக்கு செல்கிறார்கள். மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

கோவிலுக்கு போக வேண்டாம் என்று கூறுபவர்களும் தேர்தல் நேரத்தில் கோவிலுக்கு செல்கிறார்கள். மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Kushboo

actress Kushboo

சுவாமி விவேகானந்தர் 161_து பிறந்த நாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற குஷ்பு தமிழக அரசின் தவற்றை தட்டிக்கேட்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.

Advertisment

சுவாமி விவேகானந்தரின் 161_வது பிறந்த நாளை விவேகானந்த நல்லோர் வட்டம் சார்பில் 1200 பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்வு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. இதில் அமர்வு மூன்றில் சிறப்பு பேச்சாளராக குஷ்பு பங்கேற்றார்.

நிகழ்வுகளுக்கு பின் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்-யிடம பேசிய குஷ்பு கூறுகையில்,

தற்போது எதிர்கட்சிகள் இந்துத்துவாவை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நேரங்களில் தலையில் டர்பன் கட்டுவது, பூநூல், கோவில் போன்றவை நியாபகம் வருகிறது. கோவிலுக்கு போக வேண்டாம் என்று கூறுபவர்களும் தேர்தல் நேரத்தில் கோவிலுக்கு செல்கிறார்கள். மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

Advertisment
Advertisements

ஆளுநர் விஷயத்தில் தமிழகத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. திமுக ஒரு அரசாங்கம் நடத்துகிறீர்கள், அதற்கு மேல் கவர்னர் இருக்கிறார். அந்த அரசாங்கத்தை மேற்பார்வையிடுவதற்கும், தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கும் ஆளாக ஆளுநர் இருக்கிறார்.

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியே போகும்போது பொன்முடி 'போயா' என கைகாட்டுகிறார். பொன்முடி செய்தது பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பஸ்ஸில் ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார்.  தமிழகம், தமிழ்நாடு ரெண்டுக்குமே வித்தியாசம் இல்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சொல்லியிருக்கிறார்.

அவருக்கு எதிராக ஏன் கோஷம் போடவில்லை. காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ், அதை யாரும் மதிக்கமாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை. ஆளுநருக்கு எதிராக கோஷம்போடும்போது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக அப்படி செய்கிறார்கள்" என தெரிவித்தார்.

செய்தி: கன்னியாகுமரி த.இ தாகூர்,

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: