scorecardresearch

சென்னை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை கூட்டம்; அண்ணாமலை பங்கேற்பு

சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார்.

K Anna malai
தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ் தேசிய இணை பொதுச்செயலாளர் அருண்குமார், பா.ஜ.க சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்: திருச்சிக்கு திங்கட்கிழமை வருகை தரும் மு.க.ஸ்டாலின்; ஆதிதிராவிடர் பள்ளியில் அடிக்கல் நாட்டுகிறார்

பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பள்ளி வளாகங்களில் கூட்டம் மற்றும் பேரணி நடத்த அனுமதியில்லை. இந்தநிலையில், இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu bjp leader annamalai attends rss function at chennai private school

Best of Express