கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முனைவர் எஸ்.கே.கார்வேந்தன் எழுதிய கொங்கு இரத்தினங்கள் மற்றும் கொங்கு மாமணிகள் நூல்களின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், நலம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் மற்றும் தொழில்துறையினர் பலர் கலந்து கொண்டனர். கவின் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள கொங்கு இரத்தினங்கள் மற்றும் கொங்கு மாமணிகள் நூல்களை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு வாழ்த்துரை நிகழ்த்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/a3a8c0f4-306.jpg)
நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அண்ணாமலை, "இந்த புக்கத்தில் ஒவ்வொன்றும் ஆழமாக உள்ளது. கார்வேந்தன் அடுத்து கொங்கு வைரங்கள் என்ற புத்தகத்தை எழுத வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
நாட்டிலேயே கோவையில் மட்டும் 27% கல்லூரிகள் உள்ளது. அதாவது 441 கல்லூரிகள் உள்ளது. கொங்கு பகுதி வளர்ச்சிக்கு ஆன்மீகம் முக்கிய காரணம் ஆகும். ஆன்மீகம் என்பது அனைவரிடமும் பின்னிபிணைந்து உள்ளது. சேமிப்பு பழக்கம் கொங்கு பகுதி மக்களுக்கு அதிகம். டிரஸ்ட் (Trust) என்பது கோவையில் உள்ளது போல் தமிழகத்தில் வேறு எங்கும் எனக்கு தெரிந்து இல்லை.
ஜி.டி.நாயுடு பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்தான படம் எடுப்பது வாழ்த்துக்குரியது. ஆன்மீகம் தலைத்தோங்கி இந்த கொங்கு பகுதியில் உள்ளது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி.
/indian-express-tamil/media/post_attachments/23ddc927-19c.jpg)
கள் வேண்டும் என நாம் கூறுகிறோம். கள் என்றால் அதில் ஆல்கஹால் உள்ளது என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கள்ளில் இயற்கையாக உருவாக கூடிய ஆல்கஹால் தான் உள்ளது. கள்ளை மதுபானத்துடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. கள்- Natural Medicine ஆகும். இதனை அனைத்து கட்சிகளும் மேடையில் ஒன்றாக இணைந்து பேச வேண்டும். மொழி சம்பந்தமாக ஒவ்வொரு கட்சிகள் அவர்களது கருத்துகளை தெரிவிப்பதை நான் வரவேற்கிறேன் என பேசினார்.
பி.ரஹ்மான் கோவை