scorecardresearch

அண்ணாமலை- கார்த்தி சிதம்பரம் இணைந்து செல்ஃபி: ஒரே விமானத்தில் பயணம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இணைந்து செல்ஃபி; கோவைக்கு ஒரே விமானத்தில் பயணம்

அண்ணாமலை- கார்த்தி சிதம்பரம் இணைந்து செல்ஃபி: ஒரே விமானத்தில் பயணம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரமும் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் இன்று ஒரே விமானத்தில் பயணம் செய்தனர்.

இதையும் படியுங்கள்: மதுரை ஐகோர்ட் கிளையில் சவுக்கு சங்கர் ஆஜர்: வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோவை தனக்காக நியமிக்க கோரிக்கை

கோவையில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

அதே விமானத்தில் கேரளா செல்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் வந்திருந்தார். அப்போது இருவரும் விமான நிலையத்தில் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இருவரும் இணைந்து விமானத்தில் வைத்து எடுத்துக்கொண்ட இந்த செல்ஃபி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu bjp leader annamalai took selfie with congress mp karti chidambaram goes viral

Best of Express