Advertisment

தி.மு.க ஆட்சியில் பட்டியல் இனத்தவருக்கு அங்கீகாரம் இல்லை; திருமாவளவன் உணர்ந்து பேசியிருக்கிறார் – வானதி சீனிவாசன்

திராவிட மாடல் ஆட்சியில் பட்டியல் இனத்தவருக்கு அங்கீகாரம் இல்லை என்பதை திருமாவளவன் உணர்ந்திருப்பதால் இதுபோல் பேசியிருக்கலாம் – புதுச்சேரியில் வானதி சீனிவாசன் பேட்டி

author-image
WebDesk
New Update
Vanathi Srinivasan

தமிழக கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என தைரியமாக திருமாவளவன் கூறியிருப்பது என்பது வரவேற்கத்தக்கது என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புதுச்சேரியில் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என தைரியமாக திருமாவளவன் கூறியிருப்பது என்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திராவிட மாடல் ஆட்சி என்றும் சமூக நீதி என்றும் பேசி வரும் தி.மு.க அரசு பட்டியலினத்திற்கு எந்த ஒரு அங்கீகாரமும் கொடுக்காமல் உள்ளனர். ஆனால் பா.ஜ.க.,வில் பட்டியலினத்தைச் சேர்ந்த குறிப்பாக அருந்ததியினத்தைச் சேர்ந்தவர்களை தேர்தலில் தோற்றாலும் அவர்களை மோடி அமைச்சரவையில் அமர்த்தியுள்ளார். ஆனால் தமிழக தி.மு.க அரசில் பட்டியலினத்தவர்கள் எத்தனை பேர் முக்கிய இலாக்காக்களை பெற்றுள்ளனர். 

திருமாவளவனின் கோரிக்கையை பா.ஜ.க ஆதரிப்பதாகவும், அவரது முயற்சி வெற்றி பெற வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். தி.மு.க அரசின் சமூக நீதிக்கும் அவர்களின் செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமாவளவனுக்கு புதிய சக்தி கிடைத்திருக்கலாம் அல்லது திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலினத்தவருக்கும் எந்த அங்கீகாரமும் இல்லை என்பதை அவர் உணர்ந்திருப்பதால் இதுபோல் பேசியிருக்கலாம். திருமாவளவன் கடந்த சில வருடங்களாக டெல்லியில் பா.ஜ.க ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் பா.ஜ.க பட்டியலினத்தவர்களுக்கு எந்த விதமான முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும் பார்த்திருக்கிறார் அதனால் அவர் தற்போது தமிழகத்தில் இது போல பேசி இருக்கலாம்.

மேலும் ஒரு அரசியல் கட்சி தொடங்கினார்கள் என்றால் மாநாடு நடத்துவதற்கோ மற்றதற்கோ அனுமதி கேட்பது என்பது அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. அதற்கு இந்த அரசு அனுமதி மறுப்பது என்பது அந்த நீதியை நிலைநாட்ட நீதிமன்றத்தை நாடலாம். 

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மற்றும் நிர்மலா சீதாராமன் விஷயத்தை தி.மு.க, காங்கிரசார் அரசியல் ஆக்குகின்றனர். ஜி.எஸ்.டி பிரச்சனைகளுக்கு நேரம் ஒதுக்கி அதற்கு நாங்கள் தீர்வு கொடுக்கிறோம். அன்று அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் பேசிய நிகழ்வாகட்டும், அதன் பிறகு தற்போது நடக்கும் நிகழ்வாகட்டும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அணுகும் முறையை பார்க்கும்போது எது உண்மை, எது பொய் என்று ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் செய்த அயோக்கியத்தனம், பொய் ஆகியவற்றை அவர் ஒவ்வொன்றாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெறியேயும் வெளியிடுகிறார். எனவே அவர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோடு இதை அரசியல் ஆக்குகின்றனர்.

மதுவிலக்கைப் பொறுத்தவரை பா.ஜ.க எப்போதும் ஆதரவாக இருக்கும், மதுவால் அதிகம் பாதிக்க கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் எங்களை அழைக்கவில்லை. ஆனால் நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் கலந்துகொள்ளலாம்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றது குறித்து,  எந்தெந்த கம்பெனியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எங்கெங்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை விரைவில் அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறேன்.” இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பாபு ராஜந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Thirumavalavan Puducherry Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment