scorecardresearch

நீதிபதி சந்துருவின் இந்தக் கதையை படமாக்க தி.மு.க அரசு ஒத்துழைக்குமா? பா.ஜ.க கேள்வி

Tamilnadu Update : படைப்பு சுதந்திரத்தை மதித்து இந்த திரைப்படம் தயாரிப்பதற்கும், வெளியிடுவதற்கும் தி.மு.க., அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்குமா?”

Tamilnadu News Update : நீதிபதி சந்துருவின் சுயசரிதையில் இ்டம் பெற்றுள்ள மாணவர் உதயகுமார் மரணம் தொடர்பான சம்பவத்தை திரைப்படமாக எடுக்க திமுக அரசு ஒத்துழைக்குமா என்று, பாஜகவின் மாநில் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 1971-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது அப்பல்கலைகழக மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலை கழக்த்தின் இந்த நடவடிக்கைக்கு எதிரான போராடியவர்களில் முக்கியமாவனர் உதயகுமார். மேலும் அப்போது கழுமையின் கழுத்தில் டாக்டர் பட்டம் மற்றும் பல்கலைகழக சுவற்றில் டாக்டர் பட்டம் குறித்து வரையப்பட்ட கேலிச்சித்திரங்கள் என இந்நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த பட்டமளிப்பு விழா முடிந்து முதல்வர் கருணாநிதி அங்கிருந்து பாதுகாப்புடன் வெளியே சென்ற பிறகு பல்கலைகழக மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகு அடுத்தநாள் மாணவர் உதயகுமார் அருகில் உள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்றளவும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது

இது குறித்து தனது சுயசரிதையில் பகிர்ந்துள்ள நீதிபதி சந்துரு,  1971-ம் ஆண்டு நடத்த கலவரத்தில்,  மாணவர் பி.உதயகுமார் மரணமடைந்தார். அந்த நேரத்தில் கட்சியை விட்டு நீ்க்கப்பட்ட எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தினை வளர்க்க சுறாவளி பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது சிதம்பரம் வந்த அவர், தனது அரசியலுக்காக உதயகுமாரின் மரணத்தை பயன்படுத்திக்கொள்கிறார்.

அந்த நேரத்தில் போராட்டிய எஸ்எப்ஐ மாணவர்களுக்காக நான் வாதாடியபோது, ஆங்கிலத்தில் வாதாட பா.சிதம்பரத்தை அழைத்துச்சென்றேன். இதற்காக அவர் கட்டணம் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. 2001-ம் ஆண்டு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்ததும், முதல்வரிடம் விருப்பம் கேட்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எவ்வித ஆட்சேபனையம் தெரிவிக்காமல் இசைந்தார். என பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த சுயசரிதையை சுட்டிக்காட்டியுள்ள பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நானும் நீதிபதி ஆனேன்” என்ற சுயசரிதையை நீதிபதி சந்துரு எழுதியுள்ளார். அதில், 1971ம் ஆண்டு சிதம்பரம் பல்கலையில், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.. அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம், அவர்கள் மீதான போலீஸ் துறையின் அடக்கு முறையில் மாணவர் உதயகுமார் உயிரிழந்தது, அந்த வழக்கில் நடந்த உண்மை சம்பவங்கள் குறித்து எல்லாம் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி இந்த சம்பவத்தை திரைப்படமாக்க, சமூக போராளிகள், படைப்பாளிகள் என அடையாளப்படுத்தி கொள்பவர்கள் யாரேனும் முன் வர வேண்டும்.. நீதிபதி சந்துரு மற்றும் அந்த வழக்கில் ஆஜரான ப.சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? படைப்பு சுதந்திரத்தை மதித்து இந்த திரைப்படம் தயாரிப்பதற்கும், வெளியிடுவதற்கும் தி.மு.க., அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்குமா?” என்று கேட்டுள்ளார். இந்த அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu bjp narayanam asking dmk for justice chandru biography story