/indian-express-tamil/media/media_files/GyF6RFQSvpyhfQsz0SVo.jpg)
நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது
அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை தாக்கிவிட்டு, அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டிய பாஜக பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் சென்ற அரசு மாநகர் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென பேருந்தை வழி மறிந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், மாணவர்களை சாராமரியாக தாக்கியுள்ளார். மேலும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசிய ரஞ்சனா நாச்சியார், மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, பேருந்தின் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சென்னை மாங்காடு போலீசார் ரஞ்சனாவின் வீட்டுகே சென்று அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளர் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது அரசு பேருந்தை வழி மறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவரை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்றபோது ரஞ்சனா நாச்சியார் வீட்டில் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனாலும் அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர்.
அவரை கைது செய்வதற்கான வாரண்ட் மற்றும் எப்.ஐ.ஆர் சரியாக இருந்ததை காட்டியதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரத்துறையின் மாநில் செயலாளராக இருக்கும் ரஞ்சனா நாச்சியார், தமிழில் ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.