BJP Ponnar Interview Update : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முழு அதிகாரம் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி வரும் பிப்ரவரி 19-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தொடர்ந்து பிப்ரவரி 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இநத தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஜனவரி 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் அதே கூட்டணியில் தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஊரடக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜக இந்த முறையும் அதே நிலைபாட்டுடன் தேர்தலை சந்திக்க உள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாஜக கனிசமாக இடங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முழு அதிகாரம் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை பாஜக அலுவலகததில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்.
அடுத்த 2 நாட்களில் வேட்பாளாகள் நெர்காணல் நடைபெறும் என்றும், கூட்டணி தொடர்பான முடிவகள் எடுப்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முழு அதிகாரம் உள்ளது. விரைவில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்த நடைபெறும். தற்போது தனித்து போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது தமிழகத்தில் பாஜகவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவுடன் அதிக இடங்களை கேட்டு பெறுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “