முதல்வர் குறித்து ஆபாச பேச்சு : திருச்சியில் 9 பா.ஜ.க நிர்வாகிகள் சிறையில் அடைப்பு

ஆர்ப்பாட்டத்தில் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முதல்வர் குறித்து ஆபாச பேச்சு : திருச்சியில் 9 பா.ஜ.க நிர்வாகிகள் சிறையில் அடைப்பு

க.சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் புதிதாக உள்ள ஒரு நட்சத்திர  ஹோட்டலில் மதுபான கேளிக்கை நடனத்திற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த ஆர்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

publive-image
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில்,  முதல்வரை ஆபாசமாக பேசிய பா.ஜ.க.வினரை கண்டித்து திமுகவினரும் புத்தூர் நால்ரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment
Advertisements
publive-image
திமுகவினர் சாலை மறியல்

மேலும் பா.ஜ.க.வினர் பேசிய தகாத வார்த்தைக்கான வீடியோ ஆதாரத்துடன், திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பாஜகவினர் மீது புகார் அளித்த திமுகவினர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை ஆபாசமாக பேசிய பா.ஜ.க நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய திமுகவினர் இது தொடர்பாக திருச்சி உறையூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில், தமிழக முதல்வரை ஆபாச ஆபாசமாக பேசிய பா.ஜ.க பாஜக திருச்சி மாவட்டத் தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம், உறுப்பினர்கள் லெட்சுமி நாராயணன், ரமேஷ், ஹரி, நாகேந்திரன், பரஞ்சோதி, காளீஸ்வரன் பரஞ்சோதி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.  

publive-image
திமுகவினர் புகார்

மேலும் இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று வழக்கமான பரிசோதனைகள் முடித்த பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tn Bjp Tiruchirappalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: