கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக நிர்வாகிகள் தொண்டர்களை கைது நடவடிக்கை, திமுக அரசின் நடவடிக்கை, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், ஆ ராசாவின் கருத்து உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து கோவை சிவானந்த காலனி பகுதியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். பாஜக மூத்த தலைவர் சிபி ராதகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம்,மற்றும் தொண்டர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய், ஆ.ராசவை கைது செய் உள்ளிட்ட பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தொண்டர்களை போலீசார் முழு பரிசோதனைக்கு பின்பு ஆர்பாட்டகாரர்களை அனுமதித்தனர்.
இதனிடையே மேடையில் பேசிய பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில்.
தந்தை பெரியார் கொள்கையை வைத்து திமுக ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறது. பெரியாரின் காலத்தில் இருந்து தற்போதைய திமுக செயல்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதி பார்த்து தேர்தலில் போட்டியிட வைக்கிறது திமுக.ஆ.ராசா, மத மாற்றத்திற்காக தூண்டுகிறார். இவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கோவையில் போஸ்டர் ஒட்டக்கூட்டாதென்று கூட்டம் போடுவது மட்டும் தான் மாவட்ட ஆட்சியரால் முடிகிறது. அதை செயல்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்,
18 கோடி மக்களுக்கு நடந்த அநியாயத்திற்காக தான் இங்கு வந்திருக்கிறோம். 10ஆண்டுகள் காலம் காத்திருந்து வீர வசனம் பேசிய முதலமைச்சர்,கலவரத்தை யார் செய்தார்களோ அவர்களை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. திமுகவின் 15 மாத கால ஆட்சியில் மாநிலத்தில் பிரச்சினைதான் செய்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்ததில் எஸ்டிபிஐ சேர்ந்த11 பேர்,கைது செய்துள்ளனர். இதில் கேரளாவில் மல்லபுரம் பகுதியில் ஒருவரை என்ஐஏ கைது செய்து டெல்லி கோர்ட்டில் ஆஜர் செய்தது. இது தமிழகத்தில் நடக்க வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக நடக்கும்.
முதலமைச்சர் அவரே மாலை போட்டு நான் கடவுள் ,நான் கடவுள் என்று சொல்லி கொண்டு காரில் உட்கார்ந்து செல்கிறார். தமிழகத்தில் மதுவுக்கு 1கோடி 10 லட்சம் பேர் அடிமையாகி உள்ளனர். இவர்களை வெளியில் கொண்டு வர பாஜக முயற்சி செய்து வருகிறது. வீட்டில் உள்ள வேலைக்காரியை போல் மேயரை நடத்தி வருகின்றனர் அமைச்சர்கள். பரம்பிக்குளம் அணையில் இருந்து 6 டிஎம்சி தண்ணீர் வீணாக செல்கிறது.
கோவை சிறுவாணி குடிநீர் 19சதவீதம் குறைவாக வந்திருக்கும். திமுக அமைச்சர்களுக்கு முதுகு வளைந்து தான் இருக்கும். அவர்களின் முழு வேலை மக்களின் வரி பணத்தை சுருண்டுவதுதான். 99 சதவீத காவல்துறை நண்பர்கள் நல்லவர்கள், நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மாற்றபடுவீர்கள் என என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“