Tamilnadu Bjp Special Screening Of The Kashmir Files Movie : காஷ்மீரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படத்தை தமிழக பாஜக சார்பில் சிறப்பு காட்சி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1980 மற்றும் 90-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில், கிளர்ச்சியாளர்கள் இந்துக்கள் மற்றும் இந்து பண்டிட்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறி தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் காஷ்மீரில் அமைந்துள்ள இஸ்லாமிய வழிபாட்டு தளங்களில் உள்ள ஒலிபெருக்கி மூலமாகவும், இந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் எச்சரிக்கைகள் காரணமாக ஏராளமாக இந்து பண்டிதர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளுக்கும், அருகில் உள்ள மாநிலங்களுக்கு தஞ்சமடைந்தனர். இந்த சம்பவம் அன்றைய காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில, இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தி காஷ்மீரி ஃபைல்ஸ் என்ற திரைப்படம் உருவாகியுளளது.
மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர்,தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த 11-ந் தேதி இந்தியில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு வட இந்தியாவில் ஏராளமாக மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ள நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தி காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தை வரும் 16-ந் தேதி (நாளை) மாலை சென்னை ரோகினி சில்வர் ஸ்கிரீ்ன்ஸில் திரையிடப்பட உள்ளதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,
.@BJP4TamilNadu cordially invite’s all for the special screening of #KashmirFiles in Rohini Silver Screens, Chennai on 16th March at 5:30 pm
This important movie on one of the dark time in our nations history deserves our attention!
To reserve your seats:
+91 96001 19674 pic.twitter.com/Q1fbeF9tyu— K.Annamalai (@annamalai_k) March 14, 2022
மார்ச் 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை ரோகினி சில்வர் ஸ்க்ரீன்ஸில் திகாஷ்மீர் .பைல்ஸ் திரைப்படத்தின் சிறப்புத் காட்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் "நமது தேச வரலாற்றின் இருண்ட காலத்தின் இந்த முக்கியமான திரைப்படம் நம் கவனத்திற்கு உரியது. என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.