மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக பாஜக நிர்வாகியை போலீசார் கோவையில் கைது செய்தனர்.
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் மாநில பாஜக தொழில்துறை பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கஞ்சா பாலாஜி என துஷ்பிரயோக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
மேலும் இவர் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் கருத்துக்கள் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. இது குறித்து கோவை கணபதி புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை பாஜக நிர்வாகி செல்வகுமாரை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,
கடந்த 2022″ம் ஆண்டு சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவு செய்ததாக செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்படும் கருத்துக்கள் இரு பிரிவுகள் இடையே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“